சர்வதேசத்தின் முடிவால் தலைகீழாகுமா ஜனாதிபதித் தேர்தல்
ஜனாதிபதி தேர்தலுக்கான திகதி அறிவிக்கப்பட்டதன் பின்னர் நாட்டின் அரசியல் களம் நாளுக்கு நாள் சூடுபிடிக்க ஆரம்பித்துள்ளது.
தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா, ஜேவிபியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க உள்ளிட்ட பத்திற்கும் மேற்பட்ட வேட்பாளர்கள் போட்டியிடவுள்ளதாக அறிவித்துள்ள நிலையில் இன்றையதினம் பொதுஜன பெரமுனவின் வேட்பாளர் தொடர்பிலும் அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இந்த நிலையில் காரசாரமான வாத விவாதங்களையும் இலங்கையின் அரசியல் களம் சந்தித்து வருகின்றது.
இது இவ்வாறு இருக்க, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மீது சமீப காலங்களாக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச உள்ளிட்டோர் கடுமையான விமர்சனங்களை வெளியிட்டு வருவதுடன், அமைச்சர் பிரசன்ன ரணதுங்க உள்ளிட்ட சிலர் ஆதரவினையும் வெளிப்படுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மீது நாமல் ராஜபக்ச வெளிப்படுத்தி வரும் சீற்றம் மற்றும் இலங்கையின் ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் சர்வதேசத்தின் பார்வை உள்ளிட்ட பல முக்கிய விடயங்களை விரிவாக ஆராய்கின்றது இன்றைய எமது ஊடறுப்பு நிகழ்ச்சி,
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |