ராஜபக்சர்களால் கைவிடப்பட்ட கருணா! ரணிலிடம் சரணாகதி
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ரணில் விக்ரமசிங்கவுக்கு(Ranil Wickremesinghe) ஆதரவளிக்கப் போவதாக முன்னாள் பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன்(கருணா)(Vinayagamoorthi Muralidaran) தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பில்(Batticaloa) நேற்றையதினம் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
இதேவேளை, அம்மான் படையணி என்ற புதிய படையணி ஒன்றை தான் உருவாக்கியுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
ரணிலிடம் தஞ்சம்
கடந்த காலங்களில் அரசியலில் தீவிரமாக இயங்கிய கருணா, கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் தோல்வியடைந்ததுடன் செயற்பாட்டு ரீதியாக தீவிர அரசியலில் ஈடுபடவில்லை.

மேலும், ராஜபக்சர்களின்(Rajapaksa Family) தீவிர ஆதரவாளனாகவும் கருணா செயற்பட்டு வந்த நிலையில், தற்போது அவர்களால் கைவிடப்பட்ட ஒருவராக அடையாளப்படுத்தப்படுகின்றார்.
இந்தநிலையிலேயே தற்போது இலங்கையில் இரண்டு பிரதான தேர்தல்கள் நடத்தப்படவுள்ள சூழ்நிலையில் தற்போதைய ஜனாதிபதி ரணிலுக்கு தான் ஆதரவு தெரிவிக்கப்போவதாக கருணா அறிவித்துள்ளமை குறிப்பிடத்கத்கது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
பாண்டியன் மொத்த குடும்பத்தையும் போலீஸ் ஸ்டேஷன் அனுப்பிய மயில் அம்மா.... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 பரபரப்பு புரொமோ Cineulagam
இந்தியாவில் சிக்கித் தவிக்கும் H-1B ஊழியர்கள்... விசா புதுப்பித்தல் சந்திப்புகள் ரத்து News Lankasri
பணத்தை திருடும் போது நிலாவிடம் வசமாக சிக்கிய பல்லவன் அம்மா, அடுத்து நடந்தது... அய்யனார் துணை சீரியல் புரொமோ Cineulagam
ரோஹினிக்கு வந்த அதிர்ச்சி போன் கால், பதற்றத்தில் மொத்த குடும்பத்தினர்.... சிறகடிக்க ஆசை புரொமோ Cineulagam