முதலீடு தொடர்பான செயலமர்வில் நிதி அமைச்சின் அதிகாரிகள் பங்கேற்க அனுமதி மறுப்பு
அமெரிக்கா வோசிங்டனில் நடைபெறவுள்ள சுகாதாரத் துறை முதலீடு மற்றும் மேம்பாடு தொடர்பான செயலமர்வில் பங்கேற்க ஜனாதிபதி செயலகம் அனுமதி மறுத்துள்ளது.
அடுத்த மாதம் நடைபெறவுள்ள இந்த செயலமர்வில் கலந்து கொள்வதற்காக நிதியமைச்சின் பல்வேறு திணைக்களங்களைச் சேர்ந்த எட்டு அதிகாரிகளின் பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளன.
அதிகாரிகளுக்கு ஆதரவளிக்கும் செயலமர்வு
சுகாதாரத் துறை திட்டமிடல் மற்றும் திட்டங்களில் பணிபுரியும் அதன் அதிகாரிகளுக்கு ஆதரவளிக்கும் வகையில் இந்த செயலமர்வு வடிவமைக்கப்பட்டுள்ளதாக அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது.
எனினும் இந்த விஜயத்திற்கான அனுமதியை நிராகரித்த ஜனாதிபதி அலுவலகம், சுகாதாரத் துறை தொடர்பான செயலமர்வுகளின் போது, தூதுக்குழுவில் சுகாதார அமைச்சின் அதிகாரிகள் எவரும் இல்லாமையை சுட்டிக்காட்டியுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |