ஜனாதிபதி சட்டத்தரணிகள் விடுத்துள்ள எச்சரிக்கை

Parliament of Sri Lanka Ranil Wickremesinghe Sri Lanka Politician Sri Lankan political crisis
By Thulsi Sep 03, 2023 12:50 PM GMT
Report

நிறைவேற்று அதிகாரம், சட்டவாக்கத்துறையான நாடாளுமன்றம் ஆகியன நீதித்துறையை அதிகாரமில்லாத கட்டமைப்பாக வெளிப்படுத்தி, அதன் சுயாதீனத் தன்மை மீதான அச்சுறுத்தலை தீவிரப்படுத்தும் செயற்பாடுகள் தீவிரமடைந்து வருவதாக சிரேஷ்ட ஜனாதிபதி சட்டத்தரணிகளான உபுல் ஜயசூரிய, ஜயம்பதி விக்கிரமரட்ன மற்றும் சாலிய பீரிஸ் ஆகியோர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

குறித்த விடயம் தொடர்பாக நாளிதழ் ஒன்றிற்கு வழங்கிய செவ்வியில் அவர்கள் இவ்வாறு கருத்து வெளியிட்டுள்ளனர்.

ஜனாதிபதி சட்டத்தரணி உபுல் ஜயசூரிய கருத்து தெரிவிக்கையில், இந்த நாட்டில் சட்டவாக்கத்துறைக்கோ அல்லது நிறைவேற்று அதிகாரத்துறைக்கோ காணப்படாத சிறப்பு விடயமாக இருப்பது நீதித்துறையின் சுயாதீனத் தன்மையாகும்.

நீதித்துறையின் சுயாதீனத்தன்மை

அந்நிலையில், நீதித்துறையின் சுயாதீனத்தன்மை அண்மைக்காலமாக அச்சுறுத்தப்பட்டு வருகின்றன.

ஜனாதிபதி சட்டத்தரணிகள் விடுத்துள்ள எச்சரிக்கை | President Counsel Warn Parliament Independence

இதற்கு சில நிகழ்வுகளை உதாரணமாக காட்ட முடியும். குறிப்பாக, 2018 ஆம் ஆண்டு நாடாளுமன்றம் கலைக்கப்பட்ட போது, அது அரசியலமைப்புக்கு எதிரானது என்று தீர்ப்பளிக்கப்பட்ட போது அதிசிறந்த தீர்ப்பு என்று கூறி தீர்ப்பு வழங்கிய மேல்நீதிமன்றின் தலைமை நீதிபதி புகழப்பட்டார்.

பின்னர் அதே நீதிபதி தலைமையிலான குழுவினர் உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தலை நடத்துவதற்கான நிதியை விடுவிக்க வேண்டும் என்றும் ஜனநாயக உரிமைகளை மறுதலிக்கக்கூடாது என்றும் தீர்ப்பு வழங்கிய போது மோசமான தீர்ப்பு வழங்கிய நீதிபதியாக விமர்சிக்கப்பட்டார்.

இதற்கு அடிப்படையில் காரணமாக இருப்பது நிறைவேற்று அதிகாரத்துறையின் விருப்பத்துக்கு இசைவான தீர்ப்பு அளிக்கப்படாமையே ஆகும்.

நாடாளுமன்ற சிறப்புரிமை

இதுபோல, நீதிபதிகளின் தீர்ப்புக்கள் தொடர்பில் நாடாளுமன்ற சிறப்புரிமை என்ற பெயரில் சட்டவாக்கத்துறையில் பல்வேறு விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்ற நிலைமையானது நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது.

இத்தகைய நிலையில், சட்டவாக்கத்துறையின் தலைவரான சபாநாயகரும் அண்மையில் உள்நாட்டு கடன் மறுசீரமைப்பு தொடர்பான தீர்மானம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில், அது குறித்து நீதிமன்றத்தில் விசாரணைகளை முன்னெடுக்க முடியாது என்ற தீர்மானத்தினை அறிவித்துள்ளார்.

இது சட்டவாக்கத்துறையால் நீதித்துறையின் சுயாதீனத்துக்கு விடுக்கப்படும் அச்சுறுத்தலாகும். ஆகவே, இவ்வாறான அச்சுறுத்தலான நிலைமை நீடித்துச் செல்வதற்கு அனுமதிக்க முடியாது.

அது நாட்டின் ஜனநாயகத்தினை கேள்விக்குட்படுத்தும் என்றார்.

ஜனாதிபதி சட்டத்தரணிகள் விடுத்துள்ள எச்சரிக்கை | President Counsel Warn Parliament Independence

நீதித்துறைக்கு அதிகாரம் இல்லை

ஜனாதிபதி சட்டத்தரணி ஜயம்பதி விக்கிரமரட்ன தெரிவிக்கையில், அண்மைக்காலமாக நிறைவேற்றத்துறையும், சட்டவாக்கத்துறையும் தவறான புரிதலுடன் நீதித்துறையின் மீது அதிகாரப் பிரயோகங்களை செய்து அச்சுறுத்துவது மிகத் தெளிவாக அவதானிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக, உள்நாட்டுக் கடன்மறுசீரமைப்பு விடயத்தில் சட்டவாக்கத்துறையின் தலைமையான சபாநாயகரும், நிறைவேற்றுத்துறையின் தலைமையான ஜனாதிபதியும் நீதித்துறைக்கு அதிகாரம் இல்லை என்ற விடயத்தினை முன்வைத்துள்ளனர்.

இது அரசியலமைப்புக்கு முரணானதாகும். ரம்பண்டா எதிர் ரிவர்வலி டெவலப்மண்ட் போர்ட் வழக்கின் போது உலகப்புகழ் பூத்த நீதியரசரான சி.ஜி.வீரமந்திரி வழங்கிய தீர்ப்பில் மேற்படி அரசியலமைப்புக்கு முரணான செயற்பாடு என்பது தெளிவாக கூறப்பட்டுள்ளது.

ஜனாதிபதி சட்டத்தரணிகள் விடுத்துள்ள எச்சரிக்கை | President Counsel Warn Parliament Independence

அத்தீர்ப்பில் நாடாமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட சட்டமூலத்தினை நீதிமன்றம் விமர்சனத்துக்கு உட்படுத்தவோ விசாரணைகளை முன்னெடுக்கவோ முடியாது என்று கூறப்பட்டுள்ளது.

ஆனால் நாடாமன்றத்தில் நிறைவேற்றப்படும் வரையறைகள், தீர்மானங்களை விசாரணைக்குட்படுத்த முடியும் என்பதும் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. அவ்வாறான நிலையில் சட்டவாக்கத்துறையின் தலைமை பிழையான முன்னுதாரணத்தினை வைத்து நீதித்துறையின் சுயாதீனத்தன்மையை கேள்விக்குட்படுத்துகின்றார்.

ஜனாதிபதி சட்டத்தரணிகள் விடுத்துள்ள எச்சரிக்கை | President Counsel Warn Parliament Independence

அதாவது, அநுர பண்டாரநாயக்க சபாநாயகராக இருந்தபோது, நீதியரசர் சரத் என் சில்வாவுக்கு எதிராக விசாரணைகளை முன்னெடுப்பதற்கு தெரிவுக்குழுவொன்றை அமைப்பதற்கு முன்மொழியப்பட்டபோது அதற்கு அனுமதி வழங்கினார். அதற்கு நீதிமன்றம் இடைக்கால உத்தரவைப் பிறப்பத்தபோது, அவர் இடைக்கால உத்தரவின் நிராகரித்ததோடு, சட்டவாக்கத்துறைக்கு உள்ள அதிகாரத்தின் பிரகாரம் தெரிவுக்குழு அமைக்கப்படுவதாகவே குறிப்பிட்டார்.

ஆனால் பின்னரான காலத்தில், சந்திரகுப்த எதிர் சமல் ராஜபக்ஷ வழக்கின் போது வழங்கப்பட்ட தீர்ப்பின் போதும் நாடாளுமன்றத்தினால் நிறைவேற்றப்பட்ட சட்டம் சம்பந்தமாக நீதிமன்றம் விசாரணைகளை மேற்கொள்ள முடியாது என்பதும், தீர்மானங்கள் மீது நீதிமன்றம் விசாரணைகளை முன்னெடுக்க முடியும் என்பதும் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இவ்வாறான நிலையில், நீதித்துறையின் மீது சட்டவாக்கத்துறையும், நிறைவேற்றத்துறையும் அதிகாரங்கள் இல்லை என்று அழுத்தங்களைப் பிரயோகிக்கின்றமையானது நேரயாக அதன் சுயதீனத் தன்மையில் விடுக்கப்படும் அச்சுறுத்தலாம். இந்த நிலைமை எதிர்காலத்தில் மேலும் தீவிரமடையலாம் என்றார்.

சட்டத்தரணிகள் சமூகம் 

ஜனாதிபதி சட்டத்தரணிகள் விடுத்துள்ள எச்சரிக்கை | President Counsel Warn Parliament Independence

சட்டத்தரணி சாலிய பீரிஸ் தெரிவிக்கையில், நிறைவேற்று துறையால் நீதித்துறைக்கு விடுக்கப்படுகின்ற அச்சுறுத்தலானது நேரடியாக ஜனாதிபதியால் நீதித்துறைக்கு விடுகின்றதொரு அச்சுறுத்தலாகும்.

நீதிபதிகளால் குறித்த விடயம் சம்பந்தமாக வெளிப்படையாக பேச முடியாது. நீதிபதிகளால் ஊடகவியலாளர் சந்திப்புகளை நடத்த முடியாது. ஊடக அறிக்கைகளையும் வெளியிட முடியாது.

வரலாற்று ரீதியாக சட்டத்தரணிகள் சமூகம் சட்டத்தையும் பாதுகாப்பையும் உறுதிப்படுத்துகின்ற செயற்பாட்டை முன்னெடுத்துள்ளது.

அதனைச் சட்டத்தரணிகள் சமூகம் தொடர்ந்து முன்னெடுக்க வேண்டியுள்ளது. நீதித்துறையின் சுயாதீனம் நம் அனைவருக்கும் முக்கியமானதாகும்.

வெறுமனே உயர்நீதிமன்றத்தின் சுயாதீனம் மட்டுமல்ல, ஒட்டு மொத்த நீதித்துறைக்கும் அவ்விடயம் பொருத்தமானதாகும். ஆகவே நீதித்துறையின் சுயாதீனத்தினை பாதுகாப்பதற்காக சட்டத்தரணிகள் செயற்படவேண்டிய காலம் தற்போது ஏற்பட்டுள்ளது என்றார்.


மரண அறிவித்தல்

நாயன்மார்கட்டு, சுன்னாகம்

09 Oct, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரவெட்டி, London, United Kingdom

07 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Langenthal, Switzerland

12 Oct, 2020
6ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

நெல்லியடி, London, United Kingdom

03 Oct, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை

10 Oct, 2025
மரண அறிவித்தல்

உடுவில், London, United Kingdom

03 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுத்துறை, ஆழியவளை, வல்வெட்டித்துறை, Toronto, Canada

10 Oct, 2023
16ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், கனடா, Canada

11 Oct, 2009
மரண அறிவித்தல்

கொழும்பு, London, United Kingdom

03 Oct, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், உரும்பிராய்

05 Oct, 2020
15ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரவெட்டி, நெல்லியடி

10 Sep, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ்ப்பாணம், ரோம், Italy, Dortmund, Germany

11 Sep, 2025
மரண அறிவித்தல்

ஓட்டுமடம், Walthamstow, United Kingdom

09 Oct, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

Frauenfeld, Switzerland, Weinfelden, Switzerland

09 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Lampertheim, Germany

12 Sep, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, கொழும்பு

08 Oct, 2018
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, குருமன்காடு

09 Oct, 2015
மரண அறிவித்தல்

சங்கரத்தை, யாழ்ப்பாணம், சிட்னி, Australia

06 Oct, 2025
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Toronto, Canada

06 Oct, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

Ipoh, Malaysia, கொக்குவில், கோயம்புத்தூர், India, New Jersey, United States

09 Sep, 2025
மரண அறிவித்தல்

உரும்பிராய், ஜேர்மனி, Germany

06 Oct, 2025
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Markham, Canada

06 Oct, 2025
மரண அறிவித்தல்

அல்வாய் தெற்கு, Montreuil, France, London, United Kingdom

25 Sep, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US