ஆசிய விளையாட்டுப்போட்டியில் பதக்கம் வென்ற வீராங்கனைக்கு வாழ்த்து தெரிவித்த ஜனாதிபதி
ஆசிய விளையாட்டுப் போட்டியில் பெண்களுக்கான 800 மீற்றர் ஓட்டப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற வீராங்கனை தருஷி கருணாரத்னவுக்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார்.
இன்று (05.10.2023) மாணவியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு அவரது திறமைக்குப் பாராட்டுக்களைத் தெரிவித்துள்ளார்.
நேரில் சந்திக்க எதிர்ப்பார்ப்பு
இதேவேளை சர்வதேச மட்டத்தில் இலங்கைக்காக அவர் பெற்றுக்கொடுத்த தனித்துவமான வெற்றியினால் நாடு மிகவும் பெருமையடைவதாக தெரிவித்த ஜனாதிபதி, அவரது எதிர்கால விளையாட்டு நடவடிக்கைகளுக்கு தனது ஆசீர்வாதத்தையும் தெரிவித்துள்ளார்.
மேலும், மாணவி தருஷி கருணாரத்ன நாட்டிற்கு வந்ததன் பின்னர் அவரைச் சந்திக்க எதிர்பார்ப்பதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

சனல் 4வை பற்றி பேசாதீர்கள்: எனது முடிவு இது: ஜெர்மனியில் ஊடகவியலாளரை எச்சரித்த ரணில் (முழுமையான தமிழாக்க காணொளி)
இதேவேளை எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாஸ நாடாளுமன்றத்தில் இன்று (05.10.2023) தருஷி கருணாரத்னவுக்கு உரையாற்றும்போது வாழ்த்து தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் கூறுகையில், "வீராங்கனையை இந்தத் துறைக்குக் கொண்டு வந்த கண்டி வளல ரத்நாயக்க மத்திய மகா வித்தியாலயத்துக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக்கொள்கின்றேன்.
ஆசியா விளையாட்டுப் போட்டிகளில் பெண்களுக்கான ஈட்டி எறிதல் பிரிவில் வெள்ளிப் பதக்கமும், மகளிருக்கான 400 மீற்றர் அஞ்சலோட்டப் போட்டியில் வெண்கலப் பதக்கமும், ஆடவருக்கான 400 மீற்றர் அஞ்சலோட்டப் போட்டியில் வெண்கலப் பதக்கத்தையும் வென்ற அனைத்து இலங்கை வீரர்களுக்கும் நானும் 225 நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் இணைந்து வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கின்றேன்." என்றார்.
அத்துடன், தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்கவும் பதக்கங்களை வென்ற இலங்கை வீரர்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
செய்தி-ராகேஷ்





கேரளாவில் நிற்கும் பிரித்தானிய F-35 போர் விமானம்: இந்தியாவிற்கு லட்சங்களில் கிடைக்கும் வருமானம் News Lankasri
