எரிபொருட்களின் விலை உயர்வுக்கான கூட்டுப்பொறுப்பை ஜனாதிபதி எழுத்து மூலம் உறுதிப்படுத்தியுள்ளார்! - உதய கம்மன்பில
எரிபொருட்களின் விலை உயர்வுக்கான கூட்டுப் பொறுப்பை ஜனாதிபதி எழுத்து மூலம் உறுதிப்படுத்தியுள்ளார் என்று எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
இந்த விலையுயர்வு குறித்து தமக்கு எதிராக விமர்சனங்கள் எழுந்த நிலையில், அது ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, பிரதமர் மகிந்த ராஜபக்ச ஆகியோர் தலைமையிலான வாழ்க்கைச் செலவு குழு எடுத்த ஒரு கூட்டு முடிவு என்பது எழுத்துப்பூர்வமாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
எனவே இது குறித்து அரசாங்கத்தில் மற்றவர்களிடமிருந்து விசாரிக்க வேண்டிய அவசியமில்லை என்று அமைச்சர் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.
விலையுயர்வுக்கு உதய கம்மன்பிலவே பொறுப்பு என முன்னாள் அமைச்சர் காமினி லொக்குகே தெரிவித்திருந்தமை தொடர்பிலேயே உதய கம்மன்பில தமது கருத்தை வெளியிட்டுள்ளார்.
யாராவது அதை மறுத்தால், அது ஜனாதிபதி சொல்வதை மறுப்பதற்குச் சமமாகும் என்று அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இந்த தேதியில் பிறந்த பெண்கள் அதிர்ஷ்டசாலிகளாம்.. கணவருக்கு தான் லக்- எண்கணிதம் சொல்வது என்ன? Manithan
