சுவிஸ் ஆயுதங்களை உக்ரைனுக்கு மறு ஏற்றுமதி செய்ய சுவிஸில் ஆதரவு
சுவிஸ் (Swiss) நாட்டின் ஆயுதங்களை உக்ரைனுக்கு மற்ற நாடுகள் மறு ஏற்றுமதி செய்வதில் உள்ள தடை நீக்கப்பட வேண்டும் என நாட்டின் ஜனாதிபதி வியோலா ஆமெர்ட் (Viola Amherd) தனது ஆதரவை வெளிப்படுத்தியுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில், "தனிப்பட்ட முறையில் நமது தொழில்துறைக்கு முன்னேற்றம் தேவை என்று நான் நம்புகிறேன்.
ஆனால், நெதர்லாந்து போன்ற நாடுகள் சுவிஸ் உற்பத்தி ஆயுதங்களை பெறுவதனை நிறுத்தி வைப்பதற்கு தீர்மானித்துள்ளமையை நான் புரிந்துகொள்கிறேன். ஏனெனில் சுவிஸ் அவற்றை மறு ஏற்றுமதி செய்ய சுதந்திரம் அளிக்கவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேற்கொள்ளப்பட்ட முதலீடுகள்
மேலும், சுவிஸ் யுத்த நிலையிலுள்ள நாடுகளுக்கு நேரடியாக ஆயுதங்களை வழங்காது எனவும் அவர் தெரிவித்துள்ளார். அத்துடன், கடந்த 30 வருடங்களில் ஐரோப்பிய பாதுகாப்பில் மேற்கொண்ட முதலீடுகள் போதுமானதாக இல்லையெனவும், இனி அதிகரிக்க வேண்டிய அவசியம் உள்ளதெனவும் கூறினார்.

ரஷ்யாவின் உக்ரைன் மீதான முப்பரிமாண போரை நடத்தி வரும் நிலையில், சுவிஸ் தனது பாரம்பரிய நடுநிலைமையைக் கைவிட வேண்டும் என்ற அழைப்புகள் உள்ளகத்திலும் வெளிநாடுகளிலும் அதிகரித்து வருகின்றன.
இதன் காரணமாக, சுவிஸ் நாடாளுமன்றம் ஆயுத மறு ஏற்றுமதி விதிகளை தளர்த்த பரிந்துரைத்தது. ஆனால், அந்நாட்டு அரசாங்கம் இதை ஏற்க மறுத்துள்ளது.
சர்வதேச மாநாடுகளில், சுவிஸ் உக்ரைனின் அவசர சேவைக்கு முதலாவது GCS 200 வாகனத்தை வழங்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
Switzerland Plus ஒப்பந்தம் மூலம் பிரித்தானியா மீண்டும் ஐரோப்பிய ஒன்றியத்தில் சேர திட்டம் News Lankasri
பிரித்தானியாவில் தொழிலாளர்களை விட..வேலையின்மை உதவித்தொகை பெறுவோர் அதிகம் உள்ள பகுதிகள் News Lankasri
Bigg Boss 10: டிடிஎஃப் வாசன் ஆடிய ஆட்டம்... கோட்டை விட்ட போட்டியாளர்கள்! விஜய்சேதுபதி கூறியது என்ன? Manithan
அனிருத் - காவ்யா மாறன் திருமணத்தில் CM விஜய் மற்றும் MK ஸ்டாலின்.. பத்திரிகை வைத்த கலாநிதி மாறன் Cineulagam