கேகாலை பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் படுகொலை
கேகாலை, கொஸ்ஸின்ன பிரதேசத்தில் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் கேகாலை பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் கிஷான்த புலஸ்தி அவரது வீட்டுக்குள் கை, கால்கள் கட்டப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்தச் சம்பவம் நேற்று (28.10.2024) திங்கட்கிழமை இடம்பெற்றுள்ளது.
கொலை செய்யப்பட்டவர் கேகாலை, ஹெட்டிமுல்ல பிரதேசத்தைச் சேர்ந்த 75 வயதுடையவர் ஆவார்.
இது தொடர்பில் தெரியவருவதாவது,
இனங்காணாத நபர் ஒருவர் கொலை செய்யப்பட்டவரின் வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்து அவரது கை, கால்களைக் கட்டி வைத்து விட்டு அவரைத் தாக்கிக் கொலை செய்துள்ளார்.
மேலதிக விசாரணைகள்
பின்னர், அந்த நபர் கொலை செய்யப்பட்டவரின் மனைவியையும் தாக்கி காயப்படுத்தியுள்ள நிலையில், வீட்டின் அலுமாரியில் இருந்த அனைத்து பொருட்களையும் கலைத்து விட்டு கார் ஒன்றையும் திருடி அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார்.
கொலை செய்யப்பட்டவரின் மனைவி சிகிச்சைக்காக கேகாலை வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார். திருடப்பட்டதாகக் கூறப்படும் கார் பின்தெனிய பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் வைத்துக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
சந்தேகநபர் தொடர்பில் இதுவரை எந்தவித தகவல்களும் கிடைக்காத நிலையில், இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கேகாலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





ஊழல் ஒழிப்பு கோஷத்தை ஊளையிடுதல் ஆக்கிய ரணில்..! 4 மணி நேரம் முன்

திருமண பேச்சுக்கு அழைத்து இளைஞரை அடித்துக் கொன்ற காதலி குடும்பம்! POCSO வழக்கில் காதலன் News Lankasri
