ஜனாதிபதி அமெரிக்கா மற்றும் ஜப்பானுக்கு விஜயம்
ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க அமெரிக்கா மற்றும் ஜப்பானுக்கு விஜயம் செய்ய உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
எதிர்வரும் 22 ஆம் திகதி ஜனாதிபதி அநுர அமெரிக்காவிற்கு விஜயம் செய்ய உள்ளார். ஐக்கிய நாடுகள் பொதுச் சபை கூட்டத்தில் பங்கேற்பதற்காக அவர் இவ்வாறு அமெரிக்காவிற்கு விஜயம் செய்ய உள்ளார்.
அநுரவின் ஜப்பான் விஜயம்
இந்த விஜயத்தின் போது ஐக்கிய நாடுகள் அமைப்பின் பொதுச் செயலாளர் அன்டானியோ குட்டாரஸ் உள்ளிட்ட பிரதிநிதிகளையும் பல்வேறு நாடுகளின் அரசு தலைவர்களையும் சந்தித்து பேச்சு வார்த்தை நடத்த உள்ளார்.
அமெரிக்கா விஜயத்தை முடித்துக் கொண்டதும் ஜனாதிபதி அநுர, ஜப்பானுக்கு எதிர்வரும் 26 ஆம் திகதி விஜயம் செய்ய உள்ளார்.
ஜப்பானிய அரசாங்கத்தின் அழைப்பின் பேரில் ஜனாதிபதி அநுர இந்த விஷயத்தை மேற்கொள்வதாக தெரிவிக்கப்படுகிறது.
எதிர்வரும் 27ஆம் திகதி ஜப்பானில் நடைபெறும் சர்வதேச வர்த்தக கண்காட்சி ஒன்றிலும் பங்கேற்க உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மேலும், ஜப்பானின் பல்வேறு முக்கியஸ்தர்களை ஜனாதிபதி சந்தித்து கலந்துரையாடுவார் என தெரிவிக்கப்படுகிறது.




