ஜனாதிபதி அநுரவின் இந்திய பயணம் தொடர்பில் வெளியான தகவல்
ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க எதிர்வரும் 16ஆம் திகதி இந்தியாவுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய, அவர் எதிர்வரும் 16 மற்றும் 17ஆம் திகதிகளில் இந்தியாவில் முக்கிய சந்திப்புகளில் ஈடுபடவுள்ளார்.
விசேட சந்திப்பு
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் வெளிவிவகார அமைச்சர் சுப்பிரமணியம் ஜெய்சங்கர் ஆகியோருடன் ஜனாதிபதி பேச்சு நடத்தவுள்ளார் எனவும், வர்த்தக சமூகத்தினருடனும் சந்திப்பொன்று இடம்பெறவுள்ளது எனவும் அறியமுடிகின்றது.

மேலும், வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத், கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் ஆகியோரும் ஜனாதிபதியுடன் டில்லி செல்லவுள்ளனர்.
அத்துடன், கடற்றொழில் பிரச்சினை சம்பந்தமாகவும் இதன்போது கலந்துரையாடப்படவுள்ளது எனவும் அறியமுடிகின்றது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
தமிழர் அரசியலும் சிங்கள பௌத்த அரசியல் மனநிலையும்.. 12 மணி நேரம் முன்
புகலிடக்கோரிக்கையாளர்கள் 10,000 பவுண்டுகள் செலுத்தவேண்டும்... அறிமுகமாகும் புதிய சட்டம் News Lankasri
'காதல் சொல்ல வந்தேன்' நடிகரின் தற்போதைய நிலை... வெளிநாட்டில் என்ன வேலை செய்றார்னு தெரியுமா? Manithan