செம்மணியை நோக்கி ஜனாதிபதி அநுர.. மிகுந்த எதிர்பார்ப்பில் பலர்
யாழ்ப்பாணத்துக்கு இன்று விஜயம் மேற்கொள்ளும் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க செம்மணி -சித்துப்பாத்தி மனிதப் புதைகுழியைப் பார்வையிடுவாரா என்று எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
பல்வேறு அபிவிருத்திப் பணிகளைத் தொடக்கி வைப்பதற்காக ஜனாதிபதி அநுரகுமார இன்று யாழ்ப்பாணத்துக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார்.
செம்மணிக்கு செல்வாரா..
முன்னதாக, "யாழ்ப்பாணம் வரும் ஜனாதிபதி அநுரகுமார, செம்மணி - சித்துப்பாத்தி மனிதப் புதைகுழியையும் பார்வையிடலாம்" என்று அமைச்சர் இ.சந்திரசேகர் தெரிவித்திருந்தார்.
இந்தநிலையில், இது தொடர்பில் செம்மணி - சித்துப்பாத்தி மனிதப் புதைகுழி தொடர்பாகப் பாதிக்கப்பட்டோர் சார்பில் முன்னிலையாகும் சட்டத்தரணி எஸ். நிரஞ்சனிடம் கேட்டபோது, "அவ்வாறான தகவல் எதுவும் இதுவரை (நேற்று வரை) நீதிமன்றத்துக்கு அறிவிக்ப்படவில்லை" என்று கூறினார்.
இந்தநிலையில், இன்றும் செம்மணி மனிதப் புதைகுழியில் அகழ்வுப் பணிகள் தொடர்ந்து நடைபெறவுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.





ஊழல் ஒழிப்பு கோஷத்தை ஊளையிடுதல் ஆக்கிய ரணில்..! 22 மணி நேரம் முன்

சிறகடிக்க ஆசை வெற்றி வசந்த் மனைவிக்கு என்ன ஆச்சு.. கதறி அழும் பொன்னி சீரியல் வைஷ்ணவி.. வைரல் வீடியோ Cineulagam
