கெஹெல்பத்தர பத்மே உள்ளிட்டோர் 72 மணி நேர தடுப்புக்காவலில்
இந்தோனேசியாவின் ஜகார்த்தாவில் கைது செய்யப்பட்ட ஐந்து திட்டமிட்ட குற்றக்குழு உறுப்பினர்களும் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் 72 மணி நேரம் தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தெரிவித்துள்ளது.
இந்தோனேசியாவில் கைது
அவர்கள் தற்போது குற்றப் புலனாய்வுத் திணைக்களம் (CID) மற்றும் மேல் மாகாண வடக்கு குற்றப் பிரிவில் விசாரணைக்காக தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
சந்தேக நபர்களான கெஹெல்பத்தர பத்மே, கமாண்டோ சலிந்த, பாணந்துரே நிலங்க, பெக்கோ சமன் மற்றும் தெம்பிலி லஹிரு ஆகியோர் இந்தோனேசிய பொலிஸ், இன்டர்போல் மற்றும் இலங்கை பொலிஸாரால் இந்தோனேசியாவில் நடத்தப்பட்ட கூட்டு நடவடிக்கையில் கைது செய்யப்பட்டனர்.
இவர்கள் நேற்று முன்தினம் விசேட விமானம் மூலம் நாட்டுக்கு அழைத்து வரப்பட்டனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |




