இந்தியாவிற்கு விஜயம் மேற்கொள்ளவுள்ள ஜனாதிபதி அநுர
ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க (Anura Kumara Dissanayaka) இந்தியாவிற்கு (India) விஜயம் ஒன்றினை மேற்கொள்ளவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விடயம் தொடர்பில் வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் (Vijitha Herath) தெரிவித்துள்ளார்.
இந்திய அரசாங்கம்
இதற்கமைய, ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க எதிர்வரும் டிசம்பர் மாதம் இந்தியாவிற்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார்.

இலங்கையின் 9ஆவது நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதியாக அநுரகுமார திஸாநாயக்க பதவியேற்றதிலிருந்து அவர் இந்தியாவிற்கு மேற்கொள்ளவுள்ள முதல் விஜயம் இதுவாகும்.
எனவே, இந்த விஜயத்தின் போது இந்திய அரசாங்கத்துடன் அவர் பலதரப்பட்ட விடயங்கள் குறித்து கலந்துரையாடுவார் எனவும் புதிய திட்டங்களோ உடன்படிக்கைகளோ எட்டப்படலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது.
பல வருடங்களுக்கு பிறகு சந்தித்துக்கொண்ட பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் பிரபலங்கள்... யார் யார் பாருங்க Cineulagam
உயிர் கொல்லும் குளிர்... மின்வெட்டால் 600,000 பேர் அவதி: ஆயிரக்கணக்கான விமானங்கள் ரத்து News Lankasri