காலத்தை கடத்த ஆட்சிக்கு வரவில்லை.. ஜனாதிபதி முழக்கம்

Anura Kumara Dissanayaka Government Of Sri Lanka Sri Lankan Peoples President of Sri lanka National People's Power - NPP
By Rakesh May 30, 2026 10:46 AM GMT
Report

தற்போதைய அரசு ஆட்சிக்கு வந்தது எப்படியாவது ஐந்து வருட காலத்தைக் கடந்து செல்வதற்காக அல்ல என ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.

மத்திய அதிவேக நெடுஞ்சாலையின் மூன்றாவது பகுதியின் இரண்டாம் கட்டத்தின் கீழ், ரம்புக்கனையிலிருந்து கலகெதர வரையிலான 18.7 கிலோமீற்றர் நீளப்பகுதியின் அபிவிருத்திப் பணிகளை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைத்து, கலகெதர பொது விளையாட்டு மைதானத்தில் நேற்று பிற்பகல் நடைபெற்ற மக்கள் சந்திப்பில் உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனைக் கூறினார்.

மைதானத்தில் திரண்டிருந்த பல்லாயிரக்கணக்கான மக்கள் மத்தியில் ஜனாதிபதி மேலும் உரையாற்றுகையில், "கடந்த கால அரசுகள் சர்வதேச வர்த்தகச் சந்தையில் அதிக வட்டிக்குக் கடன்களைப் பெற்று, தங்களது ஐந்து வருட ஆட்சிக் காலத்தை ஓட்டுவதையே குறிக்கோளாகக் கொண்டிருந்தன. ஆனால், இலங்கையில் முதன்முறையாக எதிர்காலத்தைப் பற்றிச் சிந்திக்கும் தொலைநோக்குடைய அரசு ஒன்று தற்போது உருவாகியுள்ளது.

அரசின் முக்கிய அதிகாரிக்கு இழைக்கப்பட்ட அநீதி.. உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பால் நடந்த திடீர் பதவி விலகல்

அரசின் முக்கிய அதிகாரிக்கு இழைக்கப்பட்ட அநீதி.. உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பால் நடந்த திடீர் பதவி விலகல்

நிலையான கொள்கை

இன்று நாம் ஒரு கடனைப் பெறும்போது, 2035 அல்லது 2040ஆம் ஆண்டுகளில் அதனை எம்மால் முறையாகத் திருப்பிச் செலுத்த முடியுமா என்று ஆராய்ந்தே பெறுகின்றோம்.

காலத்தை கடத்த ஆட்சிக்கு வரவில்லை.. ஜனாதிபதி முழக்கம் | President Anura Speech In Rambukkanai

நமது கடன் பெறுதல்களைத் தேசிய உற்பத்தியில் 4 வீத வரம்புக்குள் வைத்திருக்க வேண்டும் என்ற நிலையான கொள்கையில் நாம் உறுதியாக இருக்கின்றோம்.

டொலரின் ஏற்ற இறக்கங்களை வைத்து அரசு வீழ்ச்சியடையும் எனச் சிலர் மேடைகளில் கூச்சலிடுகின்றார்கள். ஆனால், நாம் முறையான பொருளாதாரத் திட்டத்துடன் பயணிக்கின்றோம். எந்தவொரு புயலுக்கும், சர்வதேச அதிர்வுகளுக்கும் அசையாமல் நிற்கக் கூடிய ஒரு பொருளாதாரத்தை உருவாக்குவதே எமது சவாலாகும்.

கடந்த 2022, 2023 காலப்பகுதியில் திறைசேரிக் கணக்கானது 800 பில்லியன் ரூபா வங்கி மேலதிகப் பற்றுடன் முற்றிலும் பணமின்றி முடங்கிக் காணப்பட்டது. இதனால் வங்கிகளால் தனியார் துறைக்குக் கடன் வழங்க முடியாமல் நிதிச் சந்தை சுருங்கியது. ஆனால், எமது முறையான முகாமைத்துவத்தால் மூன்று தசாப்தங்களுக்குப் பிறகு நாட்டின் தேசிய வருமானத்தை 16.7 வீதமாக உயர்த்தி, திறைசேரிக் கணக்கை 120,000 கோடி ரூபா மேலதிக இருப்புக்குக் கொண்டுவந்துள்ளோம்.

நாட்டின் பாரம்பரிய யுக்திக்கு முற்றுப்புள்ளி வைத்த அநுர.. இலங்கைக்குள் ஊடுறுவிய அமெரிக்க நிறுவனத்தின் வியப்பூட்டும் தகவல்

நாட்டின் பாரம்பரிய யுக்திக்கு முற்றுப்புள்ளி வைத்த அநுர.. இலங்கைக்குள் ஊடுறுவிய அமெரிக்க நிறுவனத்தின் வியப்பூட்டும் தகவல்

250 பில்லியன் கடன்

இதன் காரணமாக, அரசு வங்கிகளில் கடன் பெறுவதைக் குறைத்து, தனியார் துறையின் தொழில்துறைகளுக்காக 2025ஆம் ஆண்டில் 2000 பில்லியன் ரூபாயைக் கடனாக வழங்கியுள்ளது. இந்த ஏப்ரல் மாதத்தில் மட்டும் 250 பில்லியன் கடன் வழங்கப்பட்டுள்ளது.

காலத்தை கடத்த ஆட்சிக்கு வரவில்லை.. ஜனாதிபதி முழக்கம் | President Anura Speech In Rambukkanai

இது பொருளாதாரம் மிக வேகமாக வளர்ச்சியடைவதற்குக் காட்டும் முக்கிய அறிகுறியாகும். அத்துடன், 2027 ஆம் ஆண்டில் மூலதனச் செலவினமாக 2 ட்ரில்லியன் ரூபாவை ஒதுக்கீடு செய்வதற்கும் திட்டமிட்டுள்ளோம்.

தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ள ரம்புக்கனை முதல் கலகெதர வரையிலான 4 வழிகளைக் கொண்ட அதிவேக நெடுஞ்சாலைத் திட்டத்துக்காக 112.44 பில்லியன் ரூபா செலவிடப்படவுள்ளது. போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சு மற்றும் வீதி அபிவிருத்தி அதிகார சபையின் மேற்பார்வையின் கீழ், முழுமையாக உள்நாட்டு நிதி மற்றும் உள்நாட்டு ஒப்பந்த நிறுவனங்களின் பங்களிப்புடன் இந்தத் திட்டம் செயற்படுத்தப்படுகின்றது.

இதன் நிர்மாணப் பணிகளை 2029 மே 28ஆம் திகதிக்குள் நிறைவு செய்யத் திட்டமிடப்பட்டுள்ளது. அதேவேளை, பொத்துஹெர முதல் ரம்புக்கனை வரையிலான முதற்கட்ட நிர்மாணப் பணிகள் அடுத்த வருட நடுப்பகுதிக்குள் நிறைவு செய்யப்படும். இந்த நிதியை உரிய காலத்துக்குள் கண்டிப்பாகச் செலவிட்டு, பணிகளைத் தாமதமின்றி முடிக்க வேண்டும் என ஒப்பந்தக்காரர்களிடம் கேட்டுக்கொள்கின்றோம்." - என்று ஜனாதிபதி குறிப்பிட்டார்.

இந்நிகழ்வில் மகா சங்கத்தினர் உள்ளிட்ட மதத் தலைவர்கள், போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் பிமல் ரத்நாயக்க, பிரதி அமைச்சர்களான பிரசன்ன குணசேன, எரங்க குணசேகர, ஹங்சக விஜேமுனி, நாடாளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா, கண்டி மாவட்டச் செயலாளர் இந்திக உடவத்த, வீதி அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் டி. பாஸ்கரன் உள்ளிட்ட அரச உயர் அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் எனப் பெருந்திரளானோர் கலந்துகொண்டனர்.

GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery
மரண அறிவித்தல்

கரவெட்டி, Southampton, United Kingdom

24 Sep, 2026
மரண அறிவித்தல்

நீராவியடி, Lausanne, Switzerland

24 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், Wabern, Germany

24 Sep, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
மரண அறிவித்தல்

செட்டியார் குறிச்சி, London, United Kingdom

18 Sep, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, பாண்டியன்குளம்

24 Sep, 2026
மரண அறிவித்தல்
17ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் களபூமி, வெள்ளவத்தை

27 Sep, 2011
25ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல், சுவிஸ், Switzerland

27 Sep, 2001
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி, Frutigen, Switzerland

26 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பேராதனை

27 Sep, 2025
நன்றி நவிலல்

தொண்டைமானாறு, Lausanne, Switzerland

01 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பரிஸ், France

11 Oct, 2019
நன்றி நவிலல்

ஆனைக்கோட்டை, Markham, Canada

25 Aug, 2026
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்பு

26 Sep, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, தெல்லிப்பழை, காங்கேசன்துறை, London, United Kingdom

26 Sep, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டை, Toronto, Canada

26 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் அல்வாய் கிழக்கு, Jaffna, அல்வாய் கிழக்கு

25 Sep, 2021
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, அராலி

24 Sep, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, Villejuif, France

25 Sep, 2018
மரண அறிவித்தல்

வட்டக்கச்சி இராமநாதபுரம், Zürich, Switzerland, Brampton, Canada

22 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் கிழக்கு, சுண்டுக்குழி

25 Sep, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வறுத்தலைவிளான், யாழ்ப்பாணம், கோண்டாவில், கொழும்பு, அநுராதபுரம்

25 Sep, 2022
19ம் ஆண்டு நினைவஞ்சலி

இயக்கச்சி சங்கதார்வயல்

25 Sep, 2007
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, பிறிஸ்பேன், Australia

25 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Männedorf, Switzerland, Meilen, Switzerland

24 Sep, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நுணாவில் மேற்கு

24 Aug, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சுதுமலை

25 Sep, 2025
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, நல்லூர் வடக்கு, Bolton, Canada

20 Sep, 2026
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US