மன்னார் காற்றாலை மின்னுற்பத்தி தொடர்பில் ஜனாதிபதி வழங்கியுள்ள தகவல்
எதிர் காலத்தில் மக்களின் கருத்துக்களை அறிந்து கொண்டு, சூழலுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில், மன்னார் காற்றாலை மின் உற்பத்தி திட்டத்தை முன்னெடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
மன்னார் பஜார் பகுதியில் இன்று (17.04.2025) காலை இடம்பெற்ற தேசிய மக்கள் சக்தியின் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் பிரசார கூட்டத்தில் கலந்து கொண்டு உரை நிகழ்த்துகையில் அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், "இந்திய அரசாங்கத்தின் உதவியுடன் மன்னாரில் இருந்து தமிழ்நாடு, இராமேஸ்வரத்திற்கான பயணிகள் படகுச் சேவையை மீள ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.
முக்கிய பேச்சுவார்த்தைகள்
இதற்கான பேச்சுவார்த்தைகள் தற்போது இடம்பெற்று வருகின்றன. மேலும் மன்னாரில் காற்றைக்கொண்டு மின் உற்பத்தி செய்யக்கூடிய வசதிகள் அதிகமாக காணப்படுகின்றன.
இருப்பினும், கடந்த காலங்களில் சூழல் பாதுகாப்பை கருத்தில் கொள்ளாமல் குறித்த திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வந்தன. இந்த நிலையில் குறித்த திட்டங்கள் அனைத்தும் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளன.
எதிர்காலத்தில் மக்களின் கருத்துக்களை அறிந்து கொண்டு, சூழலுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில், குறித்த வேலைத்திட்டத்தை முன்னெடுக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
மேலும், எதிர்வரும் ஜூன் மாதம் முதல், மேலதிகமாக 4 இலட்சம் நபர்களுக்கு அஸ்வஸ்ய நிவாரணம் வழங்கப்படும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
குறித்த கூட்டத்தில் கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரன், நாடாளுமன்ற உறுப்பினர்களான ஜெகதீஸ்வரன், திலகநாதன் மற்றும் மன்னார் மாவட்டத்தில் மன்னார் நகர சபை, மன்னார், நானாட்டான், முசலி, மாந்தை மேற்கு ஆகிய பிரதேச சபைகளின் வேட்பாளர்கள் மற்றும் ஆதரவாளர்களும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |












அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 2 நாட்கள் முன்

அமெரிக்காவில் தோசையால் புகழ்பெற்ற இலங்கை தமிழர்! கனடா, ஜப்பானிலும் ரசிகர்கள்..யார் அவர்? News Lankasri

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட குழந்தை உயிரிழப்பு: உடலை பரிசோதித்த பெற்றோருக்கு காத்திருந்த அதிர்ச்சி News Lankasri

புலம்பெயர்ந்தோர் விவகாரம்... சில நாடுகளின் விசா அனுமதியை ரத்து செய்யவிருக்கும் பிரித்தானியா News Lankasri

குணசேகரன் குறித்து சாமியார் கூறிய உண்மை, அடிக்கச்சென்ற கதிர்... எதிர்நீச்சல் தொடர்கிறது பரபரப்பு புரொமோ Cineulagam
