"ஆ ராஜா.." - தனது நண்பரை பார்த்து நெகிழ்ந்த ஜனாதிபதி அநுர.. அதிகம் பகிரப்படும் காணொளி
அனுராதபுரத்திற்கு அண்மையில் விஜயம் மேற்கொண்டிருந்த ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தனது நண்பரிடம் பேசியது பலரின் மத்தியில் பேசுபொருளாகியுள்ளது.
தனது வாகனத்தில் சென்று கொண்டிருந்த ஜனாதிபதி கூட்டத்தில் நின்று கொண்டிருந்த தனது நண்பரை அழைத்து பேசும் காணொளி தற்போது அதிகம் பகிரப்பட்டு வருகின்றது.
நெகிழ்ச்சி காணொளி
குறித்த காணொளியில் ஜனாதிபதி நண்பரை பார்த்து "ஆ ராஜா! நான் உன்னைத் தேடிக்கொண்டிருந்தேன்..." என மிக எளிமையாக பேசுவது தொடர்பில் மக்கள் மகிழ்ச்சி தெரிவித்து வருகின்றனர்.
பொதுவாகவே தற்போதைய ஜனாதிபதி அநுர குமார மிகவும் எளிமையான நபர் என்ற ஒரு கருத்து முன்வைக்கப்பட்டு வருகின்றது.
இந்நிலையில், எவ்வளவு உயர்வுக்கு சென்றாலும் நமது முன்னாள் நண்பரை மறக்காத அவரின் பண்பு குறித்து பலரும் பாராட்டி அந்த காணொளியை பகிர்ந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
விண்வெளியில் எரிபொருள் நிரப்பு நிலையம் அமைக்கும் தமிழர் - விண்ணுக்கு புறப்பட்ட PSLV C62 News Lankasri
சரிசமப சீசன் 5 போட்டியாளரும், தேவயானி மகளுமான இனியாவின் பிறந்தநாள் கொண்டாட்டம்... போட்டோஸ் இதோ Cineulagam