அநுரவின் வருகையால் பொருளாதாரத்தில் ஏற்பட்டுள்ள பாரிய சரிவு - சர்வதேச ஊடகம் தகவல்
இலங்கையில் ஏற்பட்டுள்ள அரசியல் மாற்றம் காரணமாக டொலர் பத்திரத்தின் பெறுமதி குறைந்துள்ளதாக புளூம்பேர்க் செய்திச் சேவை தெரிவித்துள்ளது.
புதிய ஜனாதிபதியாக அநுரகுமார திஸாநாயக்க நேற்று தெரிவான நிலையில் இந்தத் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
சர்வதேச நாணய நிதியத்தின் இலங்கைக்கான உதவித் திட்டம் மற்றும் கடன் மறுசீரமைப்புக்கான உடன்படிக்கைகள் அநுரகுமார திஸாநாயக்கவின் வெற்றியினால் பாதிப்பு ஏற்படும் அபாயம் உள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
டொலரின் வீழ்ச்சி
டொலருக்கு நிகரான இலங்கைப் பத்திரங்கள் இன்றையதினம் 3.1 சென்ட்களால் வீழ்ச்சியடைந்துள்ளதாக புளூம்பேர்க் செய்திச் சேவை சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இது இரண்டு வருடங்களில் ஏற்பட்ட பாரிய வீழ்ச்சியாகும் என பொருளாதார ஆய்வாளர்களை மேற்கொள்காட்டி இந்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
எனினும் சர்வதேசத்துடன் இணைந்த செயற்பட தயாராக உள்ளதாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளமை குறித்தும், புளூம்பேர்க் சுட்டிக்காட்டியுள்ளது.