சீனாவில் இருந்து திரும்பிய பின் செயற்பாடுகளில் தீவிரம் காட்டும் ஜனாதிபதி
சீன (China) விஜயத்தின் பின்னர் இலங்கை ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் செயற்பாடுகளில் தீவிரம் தெரிவதாக அரசியல் தரப்புக்கள் கணித்துள்ளன.
சீனாவுக்கு நான்கு நாள் விஜயத்தின் பின்னர், களுத்துறையில் கூட்டம் ஒன்றை நடத்திய அநுரகுமார அங்கு தாம் ஏற்கனவே வெளியிட்ட வாக்குறுதிகளை மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.
இது, இலங்கையின் ஜனாதிபதிகளில், தேர்தல் வாக்குறுதிகளை மீண்டும் நினைவூட்டுபவர் என்ற வகையில் முதலாமவர் அநுரகுமார திசாநாயக்கவாகும் என்று அரசியல் பத்தி ஒன்று கூறுகிறது.
நாட்டின் அழுத்தமான பிரச்சினை
குற்றங்களில் படையினரின் தொடர்பு, மஹிந்த ராஜபக்சவின் வீடு தொடர்பாக அவர் வெளியிட்ட கருத்து மற்றும் இந்தியா மற்றும் சீனா தொடர்பான அவர் கூறிய ஏனைய விடயங்கள் அரசியல் முக்கியத்துவம் வாய்ந்தவையாக இருந்தன.
அத்துடன் தனியார் தொலைக்காட்சியில் அவர் வெளியிட்ட கருத்துக்களும் முக்கியத்துவம் பெற்றன. அத்துடன் முன்னாள் அமைச்சர் அநுர பிரியதர்சன யாப்பா, மகிந்தவின் மகனின் கைது என்பன செயற்பாடுகளாக வெளிப்பட்டுள்ளன.
நூறு நாட்களுக்கு மேல் பதவியில் இருக்கும் ஜனாதிபதி, நிர்வாகப் பிரச்சினைகளை நுண்ணிய முறையில் நிர்வகிக்க வேண்டியுள்ளது. இதுவே அவரது செயல்களில் பிரதிபலிக்கிறது.
பீஜிங்கிலிருந்து திரும்பியதிலிருந்து அவரின் தீவிர நடவடிக்கைகள், அவரது அரசாங்கத்தின் மீதான நம்பிக்கையின்மையை பிரதிபலிக்கிறதா அல்லது நாட்டின் அழுத்தமான பிரச்சினைகளைத் தீர்க்க உண்மையான அவசரத்தை பிரதிபலிக்கிறதா என்பது குறித்த விவாதங்கள் தற்போது எழுந்துள்ளன.
இந்தநிலையில், அவரது அணுகுமுறை கலவையான எதிர்வினைகளை வெளிப்படுத்தியுள்ளது. சிலர் அவரது நடைமுறை பாணியைப் பாராட்டுகிறார்கள், மற்றவர்கள் அவற்றை மிகைப்படுத்தல் என்று குறிப்பிடுகின்றனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





1000 கிமீ தூரத்தை அடையும் சீன ஹைப்பர்சோனிக் ஏவுகணை: இந்தியா உள்பட பல நாடுகளுக்கு எச்சரிக்கை News Lankasri

சன் டிவியில் எதிர்நீச்சல் சீரியலில் இருந்து இந்த பிரபலம் வெளியேறுகிறாரா?.. ரசிகர்கள் ஷாக் Cineulagam

அட சிறகடிக்க ஆசை சீரியல் புகழ் கோமதி ப்ரியாவா இது... பல வருடங்கள் முன் எப்படி உள்ளார் பாருங்க, Unseen போட்டோ Cineulagam

இனி 12 மணி நேரத்திற்கு பதில் 2 மணி நேரம் தான்.., ஜப்பானின் அதிவேக புல்லட் ரயில் இந்தியாவில் அறிமுகம் News Lankasri

யாரும் எதிர்ப்பார்க்காத நேரத்தில் ஆனந்தி கழுத்தில் தாலி கட்டிய அன்பு... சிங்கப்பெண்ணே பரபரப்பு புரொமோ Cineulagam
