இணையத்தில் பரவும் ஜனாதிபதியின் தவறாக சித்தரிக்கப்பட்ட புகைப்படம்
ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க(Anura kumara Dissanayaka) தொடர்பான மாற்றியமைக்கப்பட்ட புகைப்படம் ஒன்று இணையத்தில் அதிகமாக பகிரப்பட்டு வருகின்றது.
உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு ஜேர்மனியக் கூட்டாட்சி குடியரசிற்கு சென்றுள்ள ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுக்கு பெர்லினின் பெல்வீவ் மாளிகையில் அரச மரியாதையுடன் வரவேற்பு வழங்கப்பட்டது.
அமோக வரவேற்பு
ஜேர்மன் ஜனாதிபதி பிராங்க்-வால்டர் ஸ்டெய்ன்மியரினால்(Frank-Walter Steinmeier) நேற்று(11) ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவுக்கு அமோக வரவேற்பளிக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில், ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க, ஜெர்மன் முப்படை மரியாதையுடன் வரவேற்கப்பட்டதுடன், முப்படைகளின் அணிவகுப்பையும் பார்வையிட்டார்.
இந்த அணிவகுப்பில், ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க மற்றும் ஜேர்மன் ஜனாதிபதி பிராங்க்-வால்டர் ஸ்டெய்ன்மியர் ஆகியோர் வருகைத் தந்தபோது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் தொழிநுட்பங்களைப் பயன்படுத்தி மாற்றியமைக்கப்பட்டுள்ளன.
குறித்த, புகைப்படம் ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவின் உயரத்தை மிகவும் குறைத்து காட்டுவது போன்று மாற்றியமைக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில், மாற்றியமைக்கப்பட்ட புகைப்படத்தினை இணையவாசிகள் அதிகமாக பகிர்ந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.





ப்ரீ புக்கிங்கில் மாஸ் காட்டும் ரஜினியின் கூலி.. இதுவரை செய்துள்ள வசூல் எவ்வளவு தெரியுமா? Cineulagam

சுனாமி அலைகளுக்கு மத்தியில் கப்பலுக்கு ஓடிய மக்கள்: பெண் சுற்றுலா பயணி பகிர்ந்த திக் திக் நிமிடங்கள்! News Lankasri
