AI எதிர்காலத்தை எந்த நாடும் தனித்து கட்டியெழுப்ப முடியாது..! டெல்லியில் அநுர
செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்திற்குத் தயாரான எதிர்காலத்தை எந்தவொரு நாடும் தனித்து கட்டியெழுப்ப முடியாது என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் புதுடில்லியில் நடைபெற்ற 'AI Impact Summit' மாநாட்டில் உரையாற்றும் போதே இதனை குறிப்பிட்டுள்ளார்.
இலங்கை மற்றும் இந்தியா நாடுகளின் கலாசாரம்
செயற்கை நுண்ணறிவு என்பது கடந்த கால தொழில் புரட்சிகளைப் போன்ற ஒரு மாற்றத்தை ஏற்படுத்தும் சக்தி என விவரித்த ஜனாதிபதி, இது அனைத்து நாடுகளுக்கும் சமமானதாகவும், கலாசார ரீதியாக ஒத்துப்போகக்கூடியதாகவும் மற்றும் எளிதில் அணுகக்கூடியதாகவும் இருப்பதை உறுதி செய்ய உலகளாவிய ஒத்துழைப்பு அவசியம் என வலியுறுத்தினார்.

AI தொழில்நுட்பம் கொண்ட நாடுகளுக்கும் இல்லாத நாடுகளுக்கும் இடையே அதிகரித்து வரும் இடைவெளி, பல நாடுகளை டிஜிட்டல் பொருளாதாரத்தின் விளிம்பிற்கு தள்ளும் அபாயம் இருப்பதாகவும் அவர் எச்சரித்துள்ளார்.
இலங்கை போன்ற வளர்ந்து வரும் பொருளாதாரங்கள் இன்னும் முழுமையான உட்கட்டமைப்புகளை கொண்டிருக்கவில்லை என்றாலும், தொழில்நுட்பத் திறன் கொண்ட இளைஞர் குழு மற்றும் வலுவான சட்ட அமைப்பைக் கொண்டிருப்பதாக அவர் குறிப்பிட்டார்.
தரவு பாதுகாப்பு மற்றும் இணைய பாதுகாப்பு தொடர்பான சட்டக் கட்டமைப்புகளை அரசாங்கம் நவீனமயமாக்கி வருவதாகவும் அவர் கூறினார்.
குறிப்பாக, AI தொழில்நுட்பம் ஒரு சில மொழிகள் அல்லது சித்தாந்தங்களின் ஆதிக்கத்தில் இருக்கக்கூடாது என்றும், இலங்கை மற்றும் இந்தியா போன்ற நாடுகளின் கலாசாரம் மற்றும் மொழிகளைப் பாதுகாக்கும் வகையில் அவை ஒருங்கிணைக்கப்பட வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.
உயில் கிடைத்தவுடன் மீண்டும் வீட்டிற்குள் வந்த அய்யனார் துணை குடும்பம்.. அடுத்து நடக்கப்போகும் விஷயம் இதுதான் Cineulagam