ஊடக ஆணைக்குழுவொன்றை உருவாக்கவுள்ளதாக ஜனாதிபதி அறிவிப்பு - செய்திகளின் தொகுப்பு
புதிய நாடாளுமன்றத்தின் கீழ் உள்ளூர் ஊடகவியலாளர்களின் பிரச்சினைகள் மற்றும் முறைப்பாடுகளை முன்வைப்பதற்கு ஊடக ஆணைக்குழுவொன்றை உருவாக்கவுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
பிரதேச ஊடகவியலாளர்களைப் பாராட்டும் விதமாக ‘நாடளாவிய பிரதேச ஊடகவியலாளர்கள் அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே ஜனாதிபதி இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
பிரதேச ஊடகவியலாளர்களுக்கு தமது பிரச்சினைகளையும் முறைபாடுகளையும் தெரிவிப்பதற்கான ஒரு இடம் தேவை. பத்திரிகை சபைக்கு பதிலாக ஊடக ஆணைக்குழுவை நிறுவுவதற்கான முன்மொழிவுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
பிரதேச ஊடகவியலாளர்களின் முறைப்பாடுகளை விசாரிக்க அதிகாரம் வழங்கப்பட வேண்டும். அடுத்த புதிய நாடாளுமன்றத்தில் அது குறித்து கவனம் செலுத்துவோம் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
இவை உள்ளிட்ட மேலும் பல செய்திகளை உள்ளடக்கி வருகின்றது இன்றைய நாளுக்கான மாலை நேர செய்திகளின் தொகுப்பு..
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |