பயிர்செய்கைகளுக்கு ஏற்பட்ட சேதம் தொடர்பில் அறிக்கையிடுமாறு ஜனாதிபதி ஆலோசனை
சீரற்ற காலநிலையால் பயிர் செய்கைகளுக்கு ஏற்பட்ட சேதம் மற்றும் தாவர ஊட்டச்சத்துகளை வழங்குவது தொடர்பான அறிக்கையொன்றை தயாரித்து தருமாறு ஜனாதிபதி ஆலோசனை வழங்கியதாக விவசாய அமைச்சின் செயலாளர் உதித்த ஜயசிங்க (Uditha Jayasinghe) தெரிவித்துள்ளார்.
குறித்த அறிக்கையினை தயாரிப்பதற்காக துறைசார் நிபுணர்களுடன் கலந்துரையாடல்களை மேற்கொண்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
சீரற்ற வானிலை காரணமாக பயிர்களுக்கு பயன்படுத்தப்படும் போசாக்கு தொடர்பில் உரிய ஆய்வுகளை மேற்கொள்ளவுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
இந்த முறை பெரும்போகம் மற்றும் எதிர்வரும் போகங்களுக்கு தேவையான தாவர போசாக்கு மற்றும் அதற்கு மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பான அறிக்கையினை எதிர்வரும் திங்கட்கிழமை ஜனாதிபதியிடம் ஒப்படைக்க எதிர்பார்பதாக தெரிவித்துள்ளார்.
ஐரோப்பாவை பதறவைத்த புலம்பெயர்தல்... மொராக்கோ நாட்டவர்கள் மீண்டும் நாடு திரும்பியது ஏன்? News Lankasri