போருக்கு ஆயத்தமாகுமாறு ஐரோப்பிய மக்களுக்கு அறிவுறுத்தல் : போர் பதற்றம்
யுத்தம் அல்லது இயற்கை பேரழிவுகள் ஏற்பட்டால், அனைத்து குடியிருப்பாளர்களும் மூன்று நாட்கள் வாழ்வதற்கான அவசியமான பொருட்களை சேமிக்க வேண்டும் என்று ஐரோப்பிய ஒன்றிய (EU) அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
பொதுவெளியில் அதிகாரப்பூர்வமாக இந்த திட்டத்தை வெளியிடுவதாக ஐரோப்பிய ஒன்றியத்தின் அனர்த்தமுகாமைத்துவ ஆணையாளர் ஹாட்ஜா லஹ்பிப், அறிவித்துள்ளார்.
ஐரோப்பிய தலைவர்கள் எச்சரிக்கை
உக்ரைனின் மீது ரஷியாவின் நடத்திய தாக்குதல், விரைவில் ஒரு உலகளாவிய யுத்தமாக மாறும் அபாயம் இருப்பதாக ஐரோப்பிய தலைவர்கள் எச்சரிக்கின்றனர்.
பிரான்ஸ், நோர்வே, சுவீடன், டென்மார்க் போன்ற நாடுகள் ஏற்கனவே எச்சரிக்கைகளை வழங்கி, பயிற்சிகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
ஐரோப்பிய ஒன்றிய குடியிருப்பாளர்கள் வாழ்க்கை பாதுகாப்புக்காக பின்வரும் முக்கிய பொருட்களை சேமிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
எரிபொருள் மீட்டுபெறும் மெழுகுவத்திகள் மற்றும் மின் விளக்குகள், அடையாள ஆவணங்கள் (ID), நீர் புகாத பைகள், பாட்டிலில் குளிர்ந்த நீர், சக்தியை பெற்றுக்கொள்ளக்கூடிய பொதியிடப்பட்ட உணவுப்பொருட்கள், மின்சாரமில்லா டார்ச் மற்றும் கூடுதல் பேட்டரிகள், மருந்துகள் மற்றும் முதலுதவி பெட்டி போன்ற பொருட்களை ஆயத்தப்படுத்திக் கொள்ளுமாறு கோரப்பட்டுள்ளது.
சுவீடன் – "நெருக்கடி அல்லது யுத்தம் வந்தால்" என்ற தலைப்பில் சிறப்பு வழிகாட்டி புத்தகம் வழங்கியுள்ளது. பிரான்ஸ் – குடிமக்களுக்கு யுத்த உயிர் பிழைப்பு வழிகாட்டி மற்றும் பாதுகாப்பு வழிமுறைகள் வழங்கும் திட்டத்தை ஆரம்பித்துள்ளது.
நோர்வே – வடக்கு பகுதி குடியிருப்பாளர்களுக்காக மாபெரும் வெளியேற்ற பயிற்சிகளை நடத்தியுள்ளது.
டென்மார்க் – மூன்று நாட்களுக்கு தேவையான உணவு, மருந்து, நீர் போன்றவற்றை சேமிக்க பொதுமக்களுக்கு அறிவுறுத்தியது.
ரஷ்யர்கள், உக்ரைன் போரை உலகளாவிய போராக மாற்றிவிட்டனர் என பிரான்ஸ் அதிபர் எம்மானுவேல் மக்ரோன் தெரிவித்துள்ளார்.
ரஷ்யா உக்ரைன் மீதான ஆக்கிரமிப்பில் வெற்றி பெற்றால், அதை தொடர்ந்து ஐரோப்பிய நாடுகளிலும் முன்னேறலாம் என ஐரோப்பிய தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.
உலகளாவிய நிலைமையை கருத்தில் கொண்டு, யுத்தம், இயற்கை பேரழிவு, பெருந்தொற்று, சைபர் தாக்குதல்கள் போன்றவற்றுக்கான தயார்நிலை அவசியம் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
