அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தைக்குத் தயாராகுங்கள்: ஈரானுக்கு ஜெர்மனி அறிவுறுத்தல்
ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே நிலவி வரும் போரை முடிவுக்குக் கொண்டு வர, ஈரான் பேச்சுவார்த்தைக்குத் தயாராக இருக்க வேண்டும் என்று ஜெர்மனி வலியுறுத்தியுள்ளது.
கிரீஸ் நாட்டின் ஏதென்ஸ் நகரில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பேசிய ஜெர்மனியின் வெளி விவகார அமைச்சர் யோஹான் வேட்புல் தெரிவித்தார்.
ஈரானியப் பிரதிநிதி ஒருவருடனான சந்திப்பின்போது, இந்தப் போரை முடிவுக்குக் கொண்டு வர அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்துவது அவசியமானது என்பதைத் தான் "வலுவாக அறிவுறுத்தியதாகக்" குறிப்பிட்டுள்ளார்.
கருத்து வேறுபாடு
கடந்த வாரம், ஈரான் மீதான போர் விவகாரத்தில் ஜெர்மனிக்கும் அமெரிக்காவிற்கும் இடையே நிலவும் கருத்து வேறுபாடுகளால், ஜெர்மனியிலிருந்து சுமார் 5,000 இராணுவ வீரர்களை அடுத்த ஆறு மாதங்கள் முதல் ஒரு ஆண்டிற்குள் திரும்பப் பெறுவதாக அமெரிக்கா அறிவித்திருந்தது.

இந்தச் சூழலில் கருத்து தெரிவித்துள்ள வேட்புல், அமெரிக்கப் படைகள் வாபஸ் பெறப்பட்டாலும் ஐரோப்பாவில் நேட்டோ (NATO) அமைப்பின் பாதுகாப்பு மற்றும் தடுப்புத் திறனில் எந்தவிதக் குறைபாடும் ஏற்படாது என்று உறுதியளித்துள்ளார்.
மத்திய கிழக்கில் நிலவும் போர்ப் பதற்றத்தைத் தணிக்க இத்தகைய அரசியல் ரீதியான பேச்சுவார்த்தைகள் மிக முக்கியமானதாகக் கருதப்படுகிறது.