கிளிநொச்சியில் ஜனாதிபதி தேர்தலுக்கான ஏற்பாடுகள் பூர்த்தி
கிளிநொச்சி (Kilinochchi) மாவட்டத்தில் ஜனாதிபதி தேர்தலுக்கான ஏற்பாடுகள் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதுடன் இதுவரை 10 தேர்தல் விதிமுறை மீறல்கள் தொடர்பான முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்று இருப்பதாக மாவட்ட அரசாங்க அதிபர் எஸ் முரளிதரன் தெரிவித்துள்ளார்.
இன்று(14.09.2024) கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் மேற்கண்டாவாறு குறிப்பிட்டுள்ளார்.
வாக்களிப்பு நிலையங்கள்
தொடர்ந்து குறிப்பிடுகையில், “கிளிநொச்சி மாவட்டத்தில் ஒரு லட்சத்து தொள்ளாயிரத்து ஏழு வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி உடையவர்களாக உள்ளனர்.
கிளிநொச்சி மாவட்டத்தில் 108 வாக்களிப்பு நிலையங்களும் எட்டு வாக்கெண்ணும் நிலையங்களும் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கின்றது
இதுவரை தேர்தல் தொடர்பான பத்து முறைப்பாடு முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றிருக்கின்றன. இதில் ஆறு முறைப்பாடுகள் சிறிய அளவிலான முறைப்பாடுகளும் நான்கு முறைப்பாடுகள் சாதாரண முறைப்பாடுகளாகவும் காணப்படுகின்றன.
அதே நேரம் தேசிய அடையாள அட்டை இல்லாதவர்களுக்கு தற்காலிக அடையாள அட்டைகளை வழங்குவதற்கான செயற்பாடுகள் கிராம அலுவலர்கள் ஊடாக முன்னெடுக்கப்பட்டுள்ளது” என்றும் அரசாங்க அதிபர் எஸ் முரளிதரன் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |