பெண்கள் பிரீமியர் லீக் ஏலத்தில் புறக்கணிக்கப்பட்ட இலங்கை வீராங்கனை
இலங்கை மகளிர் அணியின் தலைவி சாமரி
அத்தபத்து, பெண்கள் பிரீமியர் லீக் இரண்டாவது பருவத்துக்கான ஏலத்தின் முதல்
சுற்று ஏலத்தில் எந்த அணியாலும் வாங்கப்படவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.
2023 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதத்துக்கான சிறந்த வீராங்கனையாக சர்வதேச கிரிக்கெட் சம்மேளனத்தினால் தெரிவாகியிருந்தார்.
அத்துடன் சமீபத்தில் முடிவடைந்த மகளிர் பிரீமியர் லீக்கின் சிறப்பாட்டக்காரரும் முதல் பதிப்பின் போது விற்கப்படவில்லை.
ஏல விற்பனை
இந்த ஏலம் மும்பையில் நேற்று சனிக்கிழமை முடிந்த நிலையில், இதன்போது பதிவு செய்யப்பட்ட 165 வீராங்கனைகளில் 30 பேர் ஐந்து அணிகளுக்கு ஏலத்தில் எடுக்கப்பட்டனர்.
அன்னாபெல் சதர்லேண்ட் மற்றும் காஷ்கௌதம் ஆகியோர் அன்றைய சிறந்த முறையே டெல்லி கேப்பிடல்ஸ் மற்றும் குஜராத் ஜெயண்ட்ஸ் அணிகளுக்காக 2 கோடி ரூபாய்களுக்கு ஏலத்தில் எடுக்கப்பட்டனர்.