பாரஊர்தி விபத்தில் சிக்கி கர்ப்பிணித்தாய் வைத்தியசாலையில் அனுமதி
ஹட்டன் - டிக்கோயா பகுதியில் வீதியோரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சிறிய ரக டிப்பர் ரக வாகனமொன்று பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளானதில் கர்ப்பிணிப் பெண் ஒருவர் காயமடைந்துள்ளார்.
இச்சம்பவம் நோர்வூட் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட டிக்கோயா நோர்வூட் பிரதான பாதையில் வைத்தியசாலைக்கு முன்பாக இன்று (05) மதியம் இடம்பெற்றுள்ளது.
சம்பவம் நிகழும் போது கர்ப்பிணித் தாய் வாகனத்தில் அமர்ந்திருந்தாகவும், வாகனத்தின் தடையினை போடாததனால் விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் மேற்கொண்ட ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளன.
நோர்வூட் பொலிஸார் விசாரணை
சம்பவத்தில் சிறிய காயங்கள் மற்றும் அதிர்ச்சி காரணமாகவே கர்ப்பிணிப்பெண் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை நோர்வூட் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





10 திருமணம், 350 துணைவியர்..! மனைவிகளுக்கு பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை: யார் இந்த இந்திய மன்னர்? News Lankasri

என் குழந்தைகளுக்கு தந்தை இல்லாமல் இருக்கலாம்... 40 வயதில் கர்ப்பமான நடிகை! வைரலாகும் நெகிழ்சி பதிவு Manithan

தயவுசெய்து இந்த சீரியலை முடித்துவிடுங்கள், கதறும் சன் டிவி சீரியல் ரசிகர்கள்... அப்படி என்ன தொடர் Cineulagam
