கொழும்பின் புறநகர் பகுதியில் கோர விபத்தில் யுவதி பலி
கொழும்பின் புறநகர் பகுதியில் இன்று சம்பவித்த கோர விபத்தில் யுவதி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
பாணந்துறை, பொல்கொட பிரதேசத்தில் பஸ் ஒன்றுடன் முச்சக்கர வண்டி மோதியதில் விபத்து சம்பவித்துள்ளது.
விபத்தில் முச்சக்கரவண்டியின் பின் ஆசனத்தில் பயணித்த யுவதி ஒருவர் படுகாயம் அடைந்த நிலையில் உயிரிழந்துள்ளார்.
ஆடைத் தொழிற்சாலை
குறித்த யுவதி வைத்தியசாலைக்கு அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
பண்டாரகம ரைகம் துடுவ பகுதியைச் சேர்ந்த, ஆடைத் தொழிற்சாலையில் பணி புரிந்த 23 வயதான நுவங்கி இந்துனில் என்ற யுவதியே உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்த யுவதி தனது பெற்றோருடன் விகாரைக்கு சென்ற நிலையில், வீடு திரும்பும் போது விபத்து ஏற்பட்டுள்ளது. விபத்தில் தாய் மற்றும் தந்தைக்கு காயம் ஏற்படவில்லை என பொலிஸார் தெரிவித்தனர்.





ரூ.400 கோடி மதிப்புள்ள நிறுவனத்திற்கு சொந்தக்காரர்.., தற்போது தேர்தலில் போட்டியிட விருப்பம் News Lankasri

ஆட்டத்திற்கு என்ட் கார்ட் போட்ட மக்கள்.. இந்த வாரம் வெளியேறும் சின்னத்திரை பிரபலம் யார் தெரியுமா? Manithan

15 வயதில் வீட்டின் அறையில் அடைத்த பெற்றோர்! 27 ஆண்டுகளுக்கு பின் 47 வயதில் பெண் மீட்பு News Lankasri
