வவுனியா வைத்தியசாலையில் நேர்ந்த விபரீதம்: கர்ப்பிணி தாயும் குழந்தையும் பலி
வவுனியா(Vavuniya) வைத்தியசாலையின் விடுதியில் அனுமதிக்கப்பட்டிருந்த கர்ப்பிணி தாய் குளியலறையில் தவறி வீழ்ந்து உயிரிழந்துள்ளதுடன் அவரது வயிற்றில் இருந்த சிசுவும் மரணமடைந்துள்ளது.
குறித்த சம்பவம் இன்று (22.04.2024) இடம்பெற்றுள்ளது.
தவறி வீழ்ந்த கர்பிணித்தாய்
மதவாச்சி பகுதியை சேர்ந்த நிறைமாத கர்பிணி தாய் ஒருவர் வவுனியா வைத்தியசாலையின் விடுதியில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதன்போது வைத்தியசாலை விடுதியில் உள்ள குளியலறைக்கு சென்ற நிலையில் தவறி வீழ்ந்து உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
இதனையடுத்து கர்ப்பிணி தாய் மீட்கப்பட்டு அவரது வயிற்றில் உள்ள குழந்தையை காப்பாற்றுவதற்கான சத்திரசிகிச்சையினை வைத்தியர்கள் மேற்கொண்ட போதிலும் வயிற்றில் இருந்த சிசுவும் உயிரிழந்துள்ளது.
மேலும் உயிரிழந்தவர்களின் சடலங்கள் உடற்கூற்று பரிசோதனைக்காக வவுனியா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
அத்துடன் சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை வவுனியா பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |





தமிழகத்தின் சட்ட ஒழுங்கும் கட்சி அரசியலும் 3 நாட்கள் முன்

20 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன இளம் பெண்: பிரித்தானியாவில் கண்டெடுக்கப்பட்ட எச்சங்கள் News Lankasri

சிம்பு நடிக்கும் அரசன் படத்தின் கதாநாயகி யார்.. மூன்று முன்னணி நடிகைகளிடம் பேச்சுவார்த்தை Cineulagam
