இந்தோனேசியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் - சுனாமி எச்சரிக்கை தொடர்பில் வெளியான தகவல்
இந்தோனேசியாவில் (Indonesia) உள்ள ஜாவா தீவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக ஜேர்மன் புவி அறிவியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
குறித்த நிலநடுக்கமானது இன்று (22.04.2024) காலை அந்நாட்டு நேரப்படி 12.48 மணியளவில் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 5.0 ஆக பதிவானதாக ஜெர்மன் புவி அறிவியல் ஆய்வு மையம் மேலும் குறிப்பிட்டுள்ளது.
சுனாமி எச்சரிக்கை
7.94 டிகிரி தெற்கு அட்சரேகையிலும், 109.32 டிகிரி கிழக்கு தீர்க்கரேகையிலும் 97.8 கி.மீ. ஆழத்திலும் பதிவான இந்நிலநடுக்கம் தொடர்பாக சுனாமி எச்சரிக்கை எதுவும் விடப்படவில்லை என கூறப்படுகிறது.
நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதங்கள் தொடர்பான விபரங்கள் ஏதும் வெளியாகாத நிலையில், கடந்த 9ஆம் திகதி மேற்கு பப்புவா மாகாணத்தில் 6.0 ரிக்டர் அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |