மாலைதீவு நாடாளுமன்றத் தேர்தலில் ஜனாதிபதி முகம்மது முய்ஸுவின் கட்சி அமோக வெற்றி
மாலைதீவு(Maldives) வாக்காளர்கள் நாடாளுமன்றத் தேர்தலில், சீன சார்பாளரான ஜனாதிபதி முகமது முய்ஸுவின் கட்சிக்கு மகத்தான வெற்றியை அளித்துள்ளனர்.
மாலைதீவு தேர்தல் ஆணையத்தின் முதற்கட்ட முடிவுகள் மற்றும் ஊடக கணிப்புகள் மூலம் முய்ஸுவின் மக்கள் தேசிய காங்கிரஸ் (PNC) நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் 93 இடங்களில் 65 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.
இந்திய இராணுவ வீரர்கள்
பிரதான எதிர்க்கட்சியான, இந்திய சார்பு மாலைதீவு ஜனநாயகக் கட்சி, முன்பு 65 இடங்களைப் பெற்றிருந்த நிலையில், இந்த முறை 12 இடங்களில் மாத்திரமே வெற்றி பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.
கடந்த ஆண்டு ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட முய்ஸு, நாட்டின் "இந்தியா முதல்" கொள்கையை முடிவுக்குக் கொண்டு வர உறுதியளித்தார். இதன்படி, அவரது அரசாங்கம், தீவில் இருந்த இந்திய இராணுவ வீரர்களை மாலைத்தீவை விட்டு வெளியேறுமாறு கேட்டுக் கொண்டமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |

செம்மணி மனித புதைகுழிக்கு நீதி கிடைக்குமா! 2 மணி நேரம் முன்

வீட்டிலேயே கார்த்திகா கழுத்தில் தாலி கட்ட சென்ற சேரன், சந்தோஷத்தில் குடும்பம், ஆனால்?- அய்யனார் துணை புரொமோ Cineulagam

விராட் கோலியுடன் தொடர்பு.., ஒரு காலத்தில் பலூன்களை விற்று, ரூ.61,000 கோடி மதிப்புள்ள நிறுவனத்தை உருவாக்கியவர் யார்? News Lankasri
