சீனாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான போர் குறித்து எதிர்வுகூறல்
அமெரிக்க அடுத்த இரண்டு வருடங்களுக்குள் சீனாவுக்கு எதிராக போரிடும் என அமெரிக்காவின் விமானப்படை ஜெனரல் ஒருவர் எதிர்வுகூறியுள்ளார். பென்டகன் அதிகாரிகள் வெளியிட்டுள்ள கருத்துகளுக்கு அமைய ஜெனரல் இந்த எதிர்கூறலை முன்வைத்துள்ளார்.
தாய்வான் தொடர்பான சீனாவின் கட்டுப்பாடு குறித்து கவனம் செலுத்தும் அமெரிக்கா
எனினும் இது அமெரிக்க இராணுவ சட்டத்திற்கு அமைவான கருத்து அல்ல என கூறப்படுகிறது. இந்த விமானப்படை ஜெனரலின் கருத்து அமெரிக்க பாதுகாப்பு தலைமையகத்தின் கருத்து அல்ல என்ற போதிலும் சீனா, தாய்வானை கட்டுப்படுத்த எடுத்து வரும் முயற்சிகள் சம்பந்தமாக அமெரிக்க இராணுவ உயர் அதிகாரிகள் கவனம் செலுத்தியுள்ளனர்.
அமெரிக்க மற்றும் தாய்வான் ஆகிய நாடுகளில் எதிர்வரும் 2024 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தல் நடைபெறவுள்ளது. அமெரிக்க ஜனாதிபதித் தேர்தல் எதிர்வரும் 2024 ஆம் ஆண்டு நவம்பர் 5 ஆம் திகதி நடைபெறவுள்ளது.
தாய்வான் நீரிணைக்கு அருகில் சீன இராணுவ செயற்பாடுகள் அதிகரிக்கப்பட்டுள்ளமையானது தாய்வானை ஆக்கிரமிக்கும் அண்மைய கால அடையாளம் என சந்தேகிப்பதாக அமெரிக்க பாதுகாப்பு ராஜாங்க செயலாளர் லொய்ட் ஒஸ்டின் அண்மையில் தெரிவித்திருந்தார்.
அதேவேளை சீனா கடந்த சில வருடங்களாக தாய்வான் மீதான தனது ராஜதந்திர, இராணுவ மற்றும் பொருளாதார அழுத்தங்களை அதிகரித்துள்ளது.
இந்த நிலையில் தமக்கு அமைதி தேவை என கூறியுள்ள தாய்வான், தமது நாட்டின் மீது தாக்குதல் நடத்தப்பட்டால், பதில் தாக்குதல் நடத்தப்படும் என தெரிவித்துள்ளார்.





ஈழத் தமிழர் விடுதலைக்கு வழி என்ன..! யார் முன்வருவர்.. 22 மணி நேரம் முன்

பட்டப்பகலில் கொடூர சம்பவம்... பொதுமக்கள் கண் முன்னே புலம்பெயர் குடும்பம் எடுத்த அதிர்ச்சி முடிவு News Lankasri

ரோஹினி, க்ரிஷ் மாற்றி மாற்றி சொன்ன விஷயம், சந்தேகத்தில் முத்து-மீனா, அப்படி என்ன நடந்தது... சிறகடிக்க ஆசை சீரியல் Cineulagam

இளவரசர் ஜார்ஜ் இனி தன் குடும்பத்துடன் சேர்ந்து பறக்கமுடியாது: வித்தியாசமான ராஜ குடும்ப விதி News Lankasri
