டெல்டா வைரஸ் மேலும் பரவாமலிருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் முன்னெடுப்பு - ஹேமந்த ஹேரத்
டெல்டா என அழைக்கப்படும் இந்திய மாறுபாடு இலங்கையில் மேலும் பரவாமல் தடுக்க அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுத்துள்ளதாகச் சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
எனவே இந்த விடயத்தில் ஒத்துழைக்க வேண்டும் என்று அவர்கள் மக்களை வலியுறுத்தியுள்ளனர்.
சுகாதார சேவைகளின் துணை பணிப்பாளர் ஹேமந்த ஹேரத் இது தொடர்பில் ஊடகங்களுக்குத் தகவல் அளித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
டெல்டா நாட்டில் பரவுவது குறித்து உரிய தகவல்கள் கிடைத்துள்ளன. கொழும்பு - தெமட்டகொட பகுதிகளிலிருந்து இந்த மாறுபாடு பரவியுள்ளதா என்பதை அறிய தற்போது சோதனைகள் மற்றும் கண்காணிப்புகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இந்தநிலையில் ஒரு தனிநபரின் கவனக்குறைவான செயல் அவரைச் சுற்றியுள்ள மற்றவர்களுக்கு ஆபத்தை விளைவிக்கும், இதன் விளைவாக நாட்டில் பெரும் அழிவு ஏற்படக்கூடும் என்று ஹேரத் எச்சரித்துள்ளார்.
எனவே, சுகாதார நடைமுறைகளைப் பொதுமக்கள் கண்டிப்பாகப் பின்பற்றாவிட்டால், புதிய மாறுபாடு நாட்டில் பரவாது என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.
இந்த நெருக்கடியான சூழ்நிலையை எதிர்கொள்ள, மக்களிடமிருந்து ஒத்துழைப்பு தேவை என்று அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.





ஜீ தமிழின் கெட்டி மேளம் சீரியல் ரசிகர்களுக்கு வந்த ஷாக்கிங் தகவல்... என்ன இப்படி ஒரு முடிவு எடுத்துட்டாங்க Cineulagam

ஜெயிலர் 2 இன்னும் ரிலீஸ் ஆகல.. அதுக்குள்ள ரஜினிகாந்த் எடுத்த அதிரடி முடிவு! என்ன தெரியுமா Cineulagam

Gen Z போராட்டக்காரர்களுடன் இணைந்த ராணுவம் - நேபாளத்தையடுத்து மற்றொரு நாட்டில் ஆட்சி கவிழ்ப்பு? News Lankasri

போலியான திருமணம்... நாடுகடத்தப்பட்ட புலம்பெயர் நபர் பிரித்தானியாவில் குடும்ப விசாவிற்கு விண்ணப்பம் News Lankasri
