மூன்று வயது சிறுவனை தாக்கிய முன்பள்ளி ஆசிரியர் கைது!
யாழில் முன்பள்ளி நிலைய ஆசிரியர் ஒருவரினால் மூன்று வயது சிறுவன் தாக்கப்பட்ட சம்பவத்தில் குறித்த ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சிறுவனை தாக்கிய ஆசிரியர்
கடந்த 24ஆம் திகதி, கோப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட முன்பள்ளி நிலையம் ஒன்றில் ஆசிரியரால் தாக்கப்பட்ட மூன்று வயதுச் சிறுவன் யாழ்ப்பாணம் போதனை வைத்தியசாலையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார்.

குறித்த ஆசிரியர் சிறுவர்களுக்கு கோலாட்டம் பழக்கியுள்ளார். இதன்போது சிறுவன் தவறிழைத்ததாக தெரிவித்து அவனை கோலாட்ட தடியால் அடித்துள்ளார்.
பின்னர் சிறுவனின் அழுகையை அடக்குவதற்கு முயற்சித்துள்ளார். இதனால் முகத்தில் கீறல் காயங்கள் ஏற்பட்டுள்ளன.
பாதிக்கப்பட்ட சிறுவன் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ள நிலையில் 36 வயதான ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலும், இது தொடர்பான விசாரணைகளை கோப்பாய் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
ராஜி பேச்சை கேட்டு பல வருடத்திற்கு பிறகு அண்ணன் வீட்டிற்கு சென்ற கோமதி, கடைசியில்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 Cineulagam
திமுகவில் இணைந்த அதிமுக முன்னாள் அமைச்சர்; அதிமுக கூட்டணியில் டிடிவி - அதிர்ச்சியில் விஜய் News Lankasri
சரிகமப லிட்டில் சேம்ப்ஸ் சீசன் 5 போட்டியாளர் மித்ரா அம்மா-அப்பாவிற்கு கிடைத்த பெரிய உதவி... Cineulagam