தலைமறைவாகியுள்ள பிரசன்ன ரணவீர! நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு
தன்னை கைது செய்வதை தடுக்குமாறு கோரி முன்னாள் அமைச்சர் பிரசன்ன ரணவீரவினால் தாக்கல் செய்யப்பட்ட மனு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படுமா, இல்லையா என்பது தொடர்பாக எதிர்வரும் ஏப்ரல் மாதம் 28 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று வெள்ளிக்கிழமை (28) உத்தரவிட்டுள்ளது.
2010 ஆம் ஆண்டில் போலி ஆவணங்களை தயாரித்து கிரிபத்கொடை பிரதேசத்தில் உள்ள அரச காணி ஒன்றை விற்பனை செய்த சம்பவம் தொடர்பில் முன்னாள் அமைச்சர் பிரசன்ன ரணவீரவை கைது செய்ய குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
பிரசன்ன ரணவீர
இந்நிலையில், தன்னை கைது செய்வதை தடுக்குமாறு கோரி முன்னாள் அமைச்சர் பிரசன்ன ரணவீரவினால் நீதிமன்றில் மனு தாக்கல் செய்யப்பட்டதையடுத்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
