விமான நிலையங்களை மூட எந்த முடிவும் எடுக்கப்படவில்லை - அமைச்சர் பிரசன்ன
நாட்டில் கடுமையான பயணக் கட்டுப்பாடுகள் நடைமுறையில் இருந்தாலும், விமான நிலையங்களை மூட எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்று சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
விமான நிலையங்களை மூடினால் வெளிநாடுகளில் வசிக்கும் இலங்கையர்களுக்கு நாட்டிற்குள் நுழைவதற்கான வாய்ப்பை இல்லாமல் போகலாம்.
எனவே சுகாதார வழிகாட்டுதல்களின்படி விமான நிலையங்கள் செயல்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.
வத்துப்பிட்டியவில் நடைபெற்ற ஒரு நிகழ்வொன்றில் வைத்து கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
மேலும் தெரிவிக்கையில்,
பல நாடுகள் தற்காலிகமாகவே இலங்கைக்கு பயணத் தடையை விதித்துள்ளன. சில நாடுகள் பயணத்தை நிறுத்தி வைத்துள்ளன.
இலங்கையர்களும் சில நாடுகளுக்கு
பயணிக்க முடியாது. குவைத் மற்றும் துபாய் போன்ற நாடுகள் இலங்கை மற்றும்
ஆசியாவின் பல நாடுகளில் இருந்து விமானங்களை நிறுத்தியுள்ளன என குறிப்பிட்டுள்ளார்.

காஷ்மீர் பயங்கரவாத தாக்குதல் யாருக்கு வெற்றி..! யாருக்கு தோல்வி 17 மணி நேரம் முன்

இஸ்ரேல் விமான நிலையத்தில் ஏவுகணை தாக்குதல்: ஏர் இந்தியா, பல விமான நிறுவனங்கள் சேவை நிறுத்தம் News Lankasri

போட்டோஸ் ஓவர், திருமணத்தின் போது எடுக்கப்பட்ட வீடியோவை வெளியிட்ட தொகுப்பாளினி பிரியங்கா.. இதோ Cineulagam
