பாதாள உலக கும்பலுக்கு ஆதரவு வழங்கும் எதிர்க்கட்சிகள்: சாடிய பிரசன்ன ரணதுங்க
பாதாள உலக கும்பலிடம் எதிர்க்கட்சிகள் அடைக்கலம் பெறுகின்றன என நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க (Prasanna Ranatunga) குற்றஞ்சாட்டியுள்ளார்.
நாடாளுமன்ற அமர்வில் இன்று (25.07.2024) எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் அமைச்சர்கள் பலரால் முன்வைக்கப்பட்ட கருத்துக்கள் குறித்து பதிலளிக்கும் முகமாகவே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
மேலும் அவர், "பாதாள உலக கும்பலிடம் எதிர்க்கட்சிகள் அடைக்கலம் பெறுவதன் காரணமாகவே யுக்திய நடவடிக்கைக்கு அவை கடும் எதிர்ப்பு தெரிவிக்கின்றன.
பொலிஸ் மா அதிபர்
அது மாத்திரமன்றி, பொலிஸ் மா அதிபரை பதவி நீக்குமாறும் வாதாடி வருகின்றன.
தோட்ட தொழிலாளர்களின் சம்பள அதிகரிப்பு பற்றி பேசாமல், பொலிஸ் மா அதிபரை பதவி நீக்கம் செய்வதற்கு ஆதரவாக எதிர்க்கட்சிகள் பேசும் இந்நிலை மூலம் அவற்றின் உண்மையான நோக்கம் எதுவென்று தெரியவந்துள்ளது” என குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |





இந்த 3 சூழ்நிலைகள்... இந்தியாவிற்கு எதிராக மீண்டும் அணு ஆயுத மிரட்டல் விடுத்த பாகிஸ்தான் News Lankasri
