இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் பொதுமக்களிடம் விடுத்துள்ள முக்கிய கோரிக்கை
சட்டவிரோதமான முறையில் பொதுப் பணத்தை வைப்புத் தொகையாக ஏற்றுக்கொள்ளும் நிறுவனங்கள் தொடர்பில் உடனடியாக முறைப்பாட்டை தெரிவிக்குமாறு இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் பி. நந்தலால் வீரசிங்க பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
இலங்கை மத்திய வங்கியின் தலைமையகத்தில் நேற்று (24) நடைபெற்ற விசேட செய்தியாளர் மாநாட்டில் கலந்து கொண்ட போதே ஆளுநர் இந்த கோரிக்கையை விடுத்துள்ளார்.
இலங்கை மத்திய வங்கியின் நாணயக் கொள்கைச் சபையினால் நடத்தப்பட்ட நான்காவது கொள்கை வட்டி விகித மாற்றங்கள் பற்றிய அறிவித்தல் தொடர்பான செய்தியாளர் மாநாட்டில் இந்த விடயம் கலந்துரையாடப்பட்டுள்ளது.
கொள்கை வட்டி விகிதங்கள்
கொள்கை வட்டி விகிதங்கள் குறைக்கப்படுவதால், மக்களுக்கு கடன் வசதிகளை வழங்குவதில் வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் வசூலிக்கும் வட்டி விகிதங்கள் எதிர்காலத்தில் குறைக்கப்பட வேண்டும் எனவும் ஆளுநர் வலியுறுத்தியுள்ளார்.
மேலும், வட்டி விகிதங்களைக் குறைக்கும் வகையில் வங்கி மற்றும் நிதியை ஒழுங்குபடுத்த மத்திய வங்கி தற்போது தயாராக இல்லை என்றும் ஆளுநர் கூறியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |