சஜித்தின் முறைகேடுகளை ஆவணப்படுத்திய பிரசன்ன ரணதுங்க
சஜித் பிரேமதாச வீடமைப்பு அமைச்சராக செயற்பட்ட காலத்தில் நடைபெற்ற முறைகேடுகள் தொடர்பான ஆவணங்களை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க வெளியிட்டுள்ளார்.
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கடந்த நல்லாட்சிக் காலத்தில் 2015 தொடக்கம் 2019 வரை வீடமைப்பு நிர்மாணத்துறை அமைச்சராக செயற்பட்டிருந்தார்.

வீடமைப்புக்கடன் முறைகேடுகள்
அக்காலத்தில் 2017-2019 காலப்பகுதியில் ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் வீரகெட்டிய பிரதேச செயலகப் பகுதியில் வசித்தவர்களுக்கு முறைகேடான வழியில் வீடமைப்புக்கடன் வழங்கியமை, காணிகள் வழங்கியமை போன்றவற்றில் முறைகேடுகள் நடைபெற்றுள்ளதாக கணக்காய்வு அறிக்கைகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் குறித்த காலப்பகுதியில் வீடமைப்பு அமைச்சினால் அச்சிடப்பட்ட போஸ்டர் மற்றும் துண்டுப் பிரசுரங்கள் போன்றவற்றிலும் முறைகேடுகள் இடம்பெற்றுள்ளதாகவும் இன்னொரு கணக்காய்வு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேற்று சனிக்கிழமை நடைபெற்ற வரவு செலவுத்திட்டத்தின் மூன்றாவது வாசிப்பின் மீதான வீடமைப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சுக்கான குழு நிலை விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய போது அமைச்சர் பிரசன்ன ரணதுங்க மேற்குறித்த இரண்டு ஆவணங்களையும் நாடாளுமன்றத்திற்கு சமர்ப்பித்துள்ளார்.
கர்நாடக வனப்பகுதிகளில் கண்டுபிடிக்கப்பட்ட தங்கம், லித்தியம் - சுரங்க அனுமதியில் சிக்கல் News Lankasri
3 லட்சம் பேர் உயிரிழக்க நேரிடும் - முதல் முறையாக மெகா நிலநடுக்க எச்சரிக்கை விடுத்த ஜப்பான் News Lankasri
இந்த மூன்று பொருட்களையும் தயாராக வைத்துக்கொள்ளுங்கள்: பிரித்தானிய வானிலை ஆராய்ச்சி மையம் வலியுறுத்தல் News Lankasri