எந்த நாடு உதவ முன்வருகிறதோ அந்த உதவியை நாங்கள் எடுப்போம் - பிரசன்ன ரணதுங்க திட்டவட்டம்
எந்த நாடு உதவ முன் வருகிறார்களோ அந்த நாட்டின் உதவியை நாங்கள் எடுப்போம் என அமைச்சர் பிரசன்ன ரணதுங்க திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு உள்ளூர் விமான நிலையத்துக்கு விஜயம் செய்த போது ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,
எனது முகத்தைப் பார்த்தால் சீனர்கள் போல் இருக்கின்றதா? இந்த விமான நிலைய கட்டட நிர்மாணப் பணிகளுக்கு அல்லது இந்த விமான நிலையத்தின் அபிவிருத்திக்கு சீன நிறுவனம் உதவி செய்யுமாக இருந்தால் அதை நாங்கள் பெற்றுக் கொள்வோம்.
வட மாகாணத்தில் இந்தியர்கள் வந்து தங்களது அபிவிருத்திகளை மேற்கொள்கின்றார்கள். மற்ற மற்ற நாட்டவர் வந்து அபிவிருத்தி செய்கின்றனர்.
அவர்களைப் பற்றி உங்களுக்கு கேள்வி கேட்க தோணவில்லை.
என்னை பொருத்தவரையில் எந்த நாடு உதவி செய்ய வந்தாலும் அதை பெற்று நாங்கள் எமது நாட்டை அபிவிருத்தி செய்ய பார்க்கிறோம் என்று தெரிவித்துள்ளார்.






