மோசமான காலநிலையில் மாணவர்களின் பாதுகாப்பு: பிரமித்த பண்டார உறுதி
காலநிலை தொடர்பான அவசரகால சூழ்நிலைகளின் போது பாதுகாப்பான பாடசாலை சூழலை உறுதி செய்து பாடசாலை மாணவர்களின் பாதுகாப்பில் முக்கிய கவனம் செலுத்துவதே அனர்த்த முகாமைத்துவ திட்டத்தின் முதன்மையான நோக்கம் என பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித்த பண்டார தென்னகோன் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் உள்ள அனர்த்த முகாமைத்துவ நிலையத்தில் இன்று (29.05.2024) நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில்,
“அவசரகால சூழ்நிலைகளை திறம்பட எதிர்கொள்வதற்கான முறையான செயற்திட்டங்களை தயாரித்தல், அனர்த்த மதிப்பீடுகளை மேற்கொள்ளல் மற்றும் அனர்த்த முகாமைத்துவ நிலைய நடவடிக்கைகளை மேற்பார்வையிடுதல் போன்ற விடயங்களில் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு அதிகாரிகளிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஆசிரியர்களுக்கு முதலுதவி பயிற்சி
மேலும், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மற்றும் அரச நிறுவனங்களுடன் கலந்தாலோசித்து பாடசாலைகளின் பழைய மாணவர் சங்கங்கள் மற்றும் பெற்றோர் ஆசிரியர் சங்கங்களின் தீவிர பங்களிப்புடன் உரிய பாடசாலை அதிபர்களின் கீழ் விஷேட பாடசாலைக் குழுக்களை உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளது.
பாடசாலை மட்டத்தில் அனர்த்த முன்னெச்சரிக்கையின் முக்கியத்துவத்தை வலியுறுத்தி, ஒவ்வொரு பாடசாலையில் இருந்தும் குறைந்தபட்சம் இரண்டு ஆசிரியர்களைத் தேர்ந்தெடுத்து அடிப்படை முதலுதவி பயிற்சி அளிப்பதுடன், பாடசாலைகளில் முறையான முதலுதவி பெட்டிகள் கிடைப்பதை உறுதிசெய்யவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், அவசரகால அனர்த்த முகாமைத்துவ நடவடிக்கைகளின் போது எதிர்நோக்கும் சில சட்ட ரீதியான சிகிச்சைகளை வழங்குவதற்கு தேவையான தீர்வுகளை எடுப்பதற்கு பல அமைச்சுகளுடன் ஆலோசனைகளை நடத்த எதிர்பார்த்துள்ளோம்” என தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





பெற்றோரையே வீட்டில் சேர்க்காத விஜய்; அவரது சுபாவமே அதுதான் - நெப்போலியன் கடும் விமர்சனம் News Lankasri

சின்ன பிள்ளை தனமாக மனோஜ் செய்த விஷயம், விழுந்து விழுந்து சிரிக்கும் குடும்பத்தினர்... சிறகடிக்க ஆசை கலகலப்பான புரொமோ Cineulagam

ஐப்பசி மாதத்தில் அதிர்ஷ்ட காணும் 6 ராசியினர்- உங்க ராசியும் இருக்கா பாருங்க- இன்றைய ராசிப்பலன் Manithan

புதிய என்ட்ரியிடம் கைமாறிய குணசேகரன் வீடியோ, கதிருக்கு வந்த ஷாக்கிங் போன் கால்... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
