ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட கடத்தப்பட்டு படுகொலை..! கண்கண்ட சாட்சி வாக்குமூலம்

Journalists In Sri Lanka Crime Prageeth Eknaligoda Murder
By Aanadhi Dec 30, 2024 02:22 PM GMT
Report

பிரபல சிங்கள ஊடகவியலாளரான பிரகீத் எக்னெலிகொட (Prageeth Ekneligoda) இராணுவத்தினரால் கடத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்டமை தொடர்பில் கண்கண்ட சாட்சியொருவர் பரபரப்புத் தகவல்களை வெளியிட்டுள்ளார்.

சிங்கள மொழி யூடியூப் ஊடகவியலாளரான சுதந்த திலகசிறியின் சுதா கிரியேசன்ஸ் SUDA CREATION சேனலில் நேற்று (29) மாலை நடைபெற்ற கலந்துரையாடல் ஒன்றின் மூலம் இந்த தகவல்கள் வெளியாகியுள்ளது.

நீக்கப்பட்டுள்ள இராணுவ அரண்கள் : அநுரவின் பாதுகாப்பு தொடர்பில் அம்பிட்டியவின் கடுமையான எச்சரிக்கை

நீக்கப்பட்டுள்ள இராணுவ அரண்கள் : அநுரவின் பாதுகாப்பு தொடர்பில் அம்பிட்டியவின் கடுமையான எச்சரிக்கை

மெக்கானிக்கல் பிரிவின் சிப்பாய்

குறித்த நிகழ்ச்சியில் தற்போதைக்கு வெளிநாட்டில் வதியும், இலங்கைக் கடற்படையின் முன்னாள் சிப்பாய என்று தன்னை அடையாளப்படுத்திக் கொள்ளும் ஒருவர் கலந்து கொண்டிருந்தார்.

ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட கடத்தப்பட்டு படுகொலை..! கண்கண்ட சாட்சி வாக்குமூலம் | Prageeth Eknaligoda Kidnapped And Murder

இவர் முன்னர் கடற்படையின் மெக்கானிக்கல் பிரிவில் சிப்பாயாக கடமையாற்றிய பிரியசாந்த என்று அடையாளப்படுத்தப்படுகின்றது.

கடற்படைச் சிப்பாய் பிரியசாந்தவின் தகவல்களின் பிரகாரம் ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட கடத்தப்பட்டு, மட்டக்களப்பின் எருமைத் தீவில் படுகொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்டுள்ளார்.

பிரகீத் எக்னெலிகொடவைக் கடத்திச் சென்ற குழுவில் எதிர்பாராதவிதமாக தானும் இணைக்கப்பட்டிருந்ததாகவும், அவரைக் கடத்திச் சென்ற போது அவர் ஊடகவியலாளர் என்பதோ, பிரகீத் எக்னெலிகொட என்பதோ தனக்குத் தெரிந்திருக்கவில்லை என்றும் குறித்த சிப்பாய் தெரிவித்துள்ளார்.

மர்மமான முறையில் வாகன விபத்து

அதன் பின்னர் மட்டக்களப்பின் எருமைத் தீவுக்கு கொண்டு செல்லப்பட்ட பிரகீத் எக்னெலிகொடவின் தலையில் மூன்று துப்பாக்கிச் சூடுகள் நடத்தப்பட்டு அவர் படுகொலை செய்யப்பட்டதாகவும், செயலாளர் ஒருவரின் உத்தரவின் பேரிலேயே குறித்த படுகொலை நடத்தப்பட்டதாக அதற்குப் பொறுப்பாக இருந்த உயரதிகாரி தன்னிடம் தெரிவித்ததாகவும் கடற்படைச் சிப்பாய் பிரியசாந்த தொடர்ந்தும் தெரிவித்துள்ளார்.

ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட கடத்தப்பட்டு படுகொலை..! கண்கண்ட சாட்சி வாக்குமூலம் | Prageeth Eknaligoda Kidnapped And Murder

பிரகீத் எக்னெலிகொடவின் தலையில் துப்பாக்கிச் சூடு நடத்திய ரில்வான் எனப்படும் கொலையாளியும் பின்னொரு காலத்தில் மர்மமான முறையில் வாகன விபத்தொன்றில் கொல்லப்பட்டதாகவும் பிரியசாந்த தெரிவித்துள்ளார்.

இதுவரை காலமும் கடத்திச் செல்லப்பட்டு காணாமல் போகச் செய்யப்பட்டதாக நம்பப்பட்ட ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொடவின் சம்பவத்தில், முதன்முறையாக அவர் படுகொலை செய்யப்பட்டதாக நம்பகமான ஒரு தகவல் முதல்தடவையாக கிடைத்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

வெளிநாடொன்றில் ஆற்றில் கவிழ்ந்த பேருந்து : 70இற்கும் மேற்பட்டோர் பலி

வெளிநாடொன்றில் ஆற்றில் கவிழ்ந்த பேருந்து : 70இற்கும் மேற்பட்டோர் பலி

பார ஊர்தி குடை சாய்ந்து விபத்திற்குள்ளானதில் ஐவர் படுகாயம்

பார ஊர்தி குடை சாய்ந்து விபத்திற்குள்ளானதில் ஐவர் படுகாயம்

 நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW 
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US