காரைநகர் பிரதேச சபைக்கு புதிய தவிசாளர் தெரிவு
காரைநகர் பிரதேச சபையின் புதிய தவிசாளராக சுயேட்சை குழுவைச் சார்ந்த மயிலன் அப்புத்துரை போட்டியின்றி தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
உள்ளுராட்சி உதவி ஆணையாளர் தலைமையில் நடைபெற்ற தவிசாளர் தெருவில் சுயேட்சைக்குழுவைச் சார்ந்த செயற்குழு உறுப்பினர் யோகநாதன் முன்மொழிய தமிழ் தேசியக் கூட்டமைப்பைச் சார்ந்த விஜயராஜா வழிமொழிந்தார்.
இதனையடுத்து வேறு எந்த முன்மொழிவுகளையும் சமர்ப்பிக்கபடாத நிலையில் சுயேட்சைகுழுவைச் சேர்ந்த மயிலன் அப்புத்துரை ஏகமனதாக தவிசாளராக தெரிவு செய்யப்படுவதாக உள்ளுராட்சி உதவி ஆணையாளர் அறிவித்தார்.
மேலும் இன்றைய சபை அமர்வில் இன்றைய தவிசாளர் தெரிவில் சுயேட்சைகுழுவைச் சார்ந்த மூன்று உறுப்பினர்களும், தமிழ் தேசியக் கூட்டமைப்பைச் சார்ந்த மூன்று உறுப்பினர்களும், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியை சார்ந்த ஒரு உறுப்பினரும் கலந்துகொண்டிருந்தனர்.
ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த இரண்டு உறுப்பினர்கள் மற்றும் ஐக்கிய தேசியக் கட்சியைச் சார்ந்த இரண்டு உறுப்பினர்கள் இன்றைய தவிசாளர் தெரிவில் கலந்துகொள்ளவில்லை.

viral video: சிறுவனின் மடியில் ஒய்யாரமாக ஓய்வெடுக்கும் ராட்சத மலைப்பாம்பு! மெய்சிலிர்க்கும் காட்சி Manithan

தலைநகரில் இருந்து 600,000 மக்களை வெளியேற்றும் நேட்டோ உறுப்பு நாடு... புடினின் அடுத்த இலக்கு News Lankasri

காஷ்மீர் தாக்குதலில் திருமணமான 7 நாளில் உயிரிழந்த கணவர்.., தம்பதியினர் கடைசியாக எடுத்த வீடியோ வைரல் News Lankasri

தனக்கு இப்படி நடந்தது எப்படி, அதனை கண்டுபிடித்த ஆனந்தி.. சிங்கப்பெண்ணே சீரியல் பரபரப்பு புரொமோ Cineulagam

மகாநதி சீரியலில் அடுத்து விஜய்க்கும், வெண்ணிலாவிற்கும் திருமணம் நடக்கப்போகிறதா?.. படப்பிடிப்பு தள போட்டோ Cineulagam
