போதைப்பொருளுக்கு எதிரான வாரத்தை பிரகடனம் செய்ய கரைச்சி பிரதேச சபை தீர்மானம்
கிளிநொச்சியில் தற்போது பாரிய பிரச்சினையாக இருக்கும் போதைப்பொருள் பாவனைக்கு எதிரான வாரமாக பிரகடனப்படுத்த வேண்டும் என கரைச்சி பிரதேச சபையினால் தீர்மானம் இன்று நிறைவேற்றப்பட்டுள்ளது.
குறித்த தீர்மானத்தை கரைச்சி பிரதேச சபையின் தவிசாளர் வேழமாலிகிதன் முன்வைத்தார்.
கரைச்சி பிரதேச சபையின் அமர்வு இன்று காலை பிரதேச சபையின் தவிசாளர் தலைமையில் நடைபெற்றது.
பிரேரணையினைக் கொண்டு வந்து உரையாற்றிய தவிசாளர்,
கிளிநொச்சியில் அண்மைக்காலமாக இடம்பெற்று வரும் கொலைகளுக்கும் தற்கொலைகளுக்கும் பிரதான காரணமாக இருப்பது போதைப்பொருள் பாவனையே ஆகும். இது தொடர்பில் கிராமங்கள் தோறும் விழிப்புணர்வு செய்யப்பட வேண்டும்.
இதற்கான செயலணி ஒன்று உருவாக்கப்பட்டு அவர்கள் போதைப்பொருள் பாவனைக்கு அடிமையானவர்களை அவற்றிலிருந்து மீட்கும் செயற்பாடாகவும் இருக்க வேண்டும்.
பிரதேச சபையின் போதைப்பொருள் பாவனைக்கெதிரான செயலணிக்கு ஒரு தொலைபேசி இலக்கம் அறிமுகம் செய்து கொள்ள வேண்டும்.
ஏனெனில் மக்கள் சட்டவிரோதமான போதைப்பொருள் உற்பத்தி நிலையங்கள் மற்றும் விற்பனை நிலையங்கள் தொடர்பாக பொலிஸாருக்கு அறிவிக்கும் போது அவ்விடயம் சம்பந்தப்பட்ட தரப்பிற்கு யாரால் முறைப்பாடு செய்யப்படுகிற விபரம் தெரிவிக்கப்படுவதால் பொலிஸாருக்கு கூற அச்சப்படுவதால் அவர்கள் பிரதேச சபைக்குத் தெரிவித்தால் பிரதேச சபை சம்பந்தப்பட்ட தரப்பிற்கு அறிவிக்க முடியுமென்பதால் பொதுமக்களின் பாதுகாப்பும் உறுதிப்படுத்தப்படும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.





16 ஆண்டுகால ஐ.நா மைய அரசியல்: பெற்றவை? பெறாதவை...... 9 மணி நேரம் முன்

உலகின் சக்தி வாய்ந்த கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் - முதலிடத்தில் உள்ள நாடு எது? News Lankasri

சித்திரவதை செய்யப்பட்டு கடலில் தூக்கி எறியப்பட்ட புலம்பெயர்ந்தோர்: அதிரவைக்கும் ஒரு செய்தி News Lankasri

7ஆம் அறிவு படத்தில் வில்லனாக நடித்த இந்த நடிகரை நினைவிருக்கிறதா? இப்போது எப்படி இருக்கிறார் தெரியுமா, இதோ பாருங்க Cineulagam

நந்தினியால் ஜனனிக்கு ஏற்பட்ட பிரச்சனை, ரவுண்டு கட்டிய குணசேகரன் ஆட்கள்.. எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
