வெற்றி பெற்ற சகல சபைகளையும் ஆளுவோம்! பிரதி அமைச்சர் பிரதீப் சூளுரை
தேசிய மக்கள் சக்தி வெற்றி பெற்ற அனைத்து சபைகளிலும் நாம் நிச்சயம் ஆட்சியமைப்போம் என்று பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் கூறுகையில்,
"தேர்தல் காலத்தில் மொட்டுக் கட்சி, தொலைபேசி கட்சி, யானைக் கட்சி என்பன ஒன்றையொன்று விமர்சித்துக்கொண்டன.
அதிகாரப் போட்டி
தற்போது அதிகாரத்தைக் கைப்பற்றி மீண்டும் ஊழலில் ஈடுபடக் கூட்டுச் சேர்கின்றன.

அந்தக் கட்சிகளின் போலி நாடகம், போலி முகத்திரை மக்களுக்குத் தெரியும். அப்படிச் சபையை அமைத்தால்கூட ஓரிரு வாரங்களுக்குக் கூட சபையை இவர்களால் நடத்த முடியாது.
தவிசாளர், உப தவிசாளர் அதிகாரப் போட்டியிலேயே காலம் சென்றுவிடும். எனவே, தேசிய மக்கள் சக்திதான் ஆட்சி அமைக்கும். தவிசாளர்கூட எமது கட்சியைச் சார்ந்தவரே நியமிக்கப்படுவார்" என குறிப்பிட்டுள்ளார்.
ஈரான் விவகாரத்தில் முதல் தாக்குதலைத் தொடங்கிய ட்ரம்ப்... சீனா, இந்தியா உட்பட பல நாடுகள் பாதிப்பு News Lankasri
விண்வெளியில் எரிபொருள் நிரப்பு நிலையம் அமைக்கும் தமிழர் - விண்ணுக்கு புறப்பட்ட PSLV C62 News Lankasri
பற்றியெரியும் ஈரான்... போர்க்களமான தெருக்கள்: இந்தியாவிற்கு ஏற்பட்டுள்ள வர்த்தகப் பாதிப்பு News Lankasri