முள்ளிவாய்க்காலில் பலரையும் மெய்சிலிர்க்க வைத்த பாலச்சந்திரனின் நினைவுகள் (Photos)
இலங்கையில் யுத்தம் முடிந்து 14 வருடங்கள் கடந்த நிலையில், இன்றும் மக்களின் கண்ணீரில் நனைந்தது முள்ளிவாய்க்கால்.
பல உயிர்களின் இரத்த கரைகள் படிந்த முள்ளிவாய்க்கால் மண்ணில், தமது உறவுகளை தமிழ் மக்கள் நினைவுகூர்ந்த வண்ணம் உள்ளனர்.
இறந்த உறவுகளின் நினைவில் கரைந்த மக்களை இன்று முள்ளிவாய்க்காலில் நிகழ்ந்த சம்பவம் ஒன்று மெய்சிலிர்க்க வைத்துள்ளது.
2009 ஆம் ஆண்டு இறுதி யுத்தத்தின் போது, விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரனின் 12 வயது மகன் பாலச்சந்திரன் மிகக் கொடூரமான முறையில் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
பாலசந்திரனின் இறப்பு
பாலச்சந்திரன் இறந்து கிடந்த காட்சியும் அவரின் அப்பாவிதனமான இறுதி தருணங்களும் என்றும் தமிழரின் நெஞ்சில் நிறைந்திருக்கும்.
அப்படியிருக்கையில் இன்று முள்ளிவாய்க்காலில் பாலசந்திரனின் இறுதி தருணங்களை ஒரு சிறுவன் மீண்டும் நினைவுப்படுத்தியுள்ளார்.
பாலச்சந்திரனை போன்று உடையணிந்து,அவர் இறுதியாக அமர்ந்திருந்ததை போன்று ஒரு இடத்தில் அமர்ந்து இருந்தார்.
இந்த காட்சி அப்படியே பாலச்சந்திரனை பிரதிபலிப்பதாக இருந்தமையால் அங்கிருந்த மக்கள் அனைவரும் அந்த சிறுவனை பார்த்து,மெய்சிலிர்த்து போனதுடன் பலர் கண்ணீர் சிந்தியுள்ளனர்.