தமிழ் நாட்டில் கைது செய்யப்பட்ட தலைவர் பிரபாகரன் (Video)
1986 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 15ம்,16ம்,17ம் திகதிகளில் பெங்களுரில் நடைபெற இருந்த ‘தெற்காசிய பிராந்திய ஒத்துழைப்பு (சார்க்) மாநாட்டில் கலந்து கொள்வதற்காக இலங்கை ஜனாதிபதி ஜே.ஆர். ஜெயவர்த்தன இந்தியா வருவதாக இருந்தது.
அவரது இந்திய விஜயத்தின் போது விடுதலைப் புலிகள் மற்றும் தமிழ் நாட்டில் தங்கியிருந்து செயற்பட்டுக் கொண்டிருந்த தமிழ் போராட்ட இயக்கங்கள் தரப்பில் இருந்து ஜே.ஆருக்கு ஏதாவது ஆபத்து ஏற்படக்கூடும் என்று இந்தியாவின் புலனாய்வுத்துறை இந்தியப் பிரதமரை எச்சரிக்கை செய்திருந்தது.
அதனைத் தொடர்ந்து, நவம்பர் மாதம் 8 ஆம் திகதி அதிகாலை தமிழ்நாட்டிலிருந்த ஈழ விடுதலை இயக்கங்களின் முகாம்கள் அனைத்தும் தமிழ்நாடு பொலிஸாரினால் திடீரென்று சுற்றிவளைக்கப்பட்டன.
அதிலும் குறிப்பாக தமிழீழ விடுதலைப் புலிகளின் முகாம்கள் ஒன்றுவிடாமல் முற்றுகையிடப்பட்டு அவர்களது ஆயுதங்கள் தமிழ்நாடு பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டன.
விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனையும் தமிழ்நாடு பொலிஸார் கைது செய்தார்கள்.
பொலிஸ் நிலையம் அழைத்துச் செல்லப்பட்ட புலிகளின் தலைவரை தமிழ்நாடு பொலிஸார் புகைப்படம் எடுத்ததுடன், அவரை அங்கு அவமானப்படுத்தும் விதத்தில் நடந்துகொண்டதாகவும் அப்பொழுது குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.
இந்த விடயங்கள் பற்றிப் பார்க்கின்றது இன்றைய 'உண்மையின் தரிசனம்' நிகழ்ச்சி......