கனடாவின் குடிவரவு கொள்கையில் நடைமுறைக்கு வரவுள்ள புதிய மாற்றம்
கனடாவின் (Canada) குடிவரவு கொள்கையில் புதிய மாற்றம் கொண்டு வரப்படவுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இதன் மூலம் செமி - ஸ்க்கில்ட் தொழிலாளர்கள் (semi-skilled workers) எனப்படும் நான்காம் மற்றும் ஐந்தாம் நிலை பணியாளர்களுக்கு நிரந்தர குடியுரிமை எளிதில் வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதற்கமைய, கனேடிய குடிவரவு, அகதிகள் மற்றும் குடியுரிமை அமைச்சகத்தினால் (IRCC) குடிவரவு மற்றும் அகதிகள் பாதுகாப்பு சட்டத்தில் (IRPA) இந்த மாற்றம் செய்யப்படவுள்ளது.
இதன்போது, பயிற்சி, கல்வி, அனுபவம் மற்றும் பொறுப்புக்கள் (TEER) நிலைகள் 4, 5 ஆகியவற்றில் அனுபவம் மற்றும் பயிற்சி பெற்ற பணியாளர்களுக்கான புதிய நிரந்தர பொருளாதார குடிவரவு வகுப்பை உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளது.
TEERS முறைமை
இதன்படி, அதிக திறன்கள் மற்றும் அனுபவங்களை கொண்ட விண்ணப்பதாரர்களுக்கு நிரந்தர குடியுரிமை (Permanent Residency) பெறுவது எளிதாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேவேளை, இதன் மூலம் பொருளாதார குடிவரவு முறைமையினையும் (economic immigration system) நவீனமாக்குவதற்கு எதிர்பார்க்கப்படுகின்றது.
மேலும், TEER (Training, Education, Experience, and Responsibilities) முறையானது தேசிய தொழில் வகைப்படுத்தல் (NOC) முறையின் புதுப்பிப்பாக 2022இல் அறிமுகப்படுத்தப்பட்டது.
தற்போது ஏற்படுத்தப்படவுள்ள மாற்றத்தின் மூலம் TEER முறைமையானது, தொழில்களுக்கான பழைய 'திறன் நிலைகள்' என்பதற்கு பதிலாக, TEERS என்று அழைக்கப்படும் பல்வேறு வகைகளில் வகைப்படுத்தப்படவுள்ளது.
அதன்படி, TEERS இன் 0 - 3 என்பது பொதுவாக இரண்டாம் நிலைக் கல்வி அல்லது குறிப்பிட்ட நீளம் கொண்ட பயிற்சி தேவைப்படும் வேலைகளுக்கானது. மேலும், TEERS 4 மற்றும் 5 ஆகியவை உயர்நிலைப் பள்ளிக் கல்வி, வேலையில் பயிற்சி மட்டுமே தேவைப்படும் வேலைகளுக்கானது ஆகும்.
குறிப்பாக, TEER 5ஆனது எவ்வித முறையான கல்வியும் இல்லாமல், குறுகிய கால பயிற்சி மட்டுமே தேவைப்படும் வேலைகளுக்கானது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், இந்த மாற்றங்கள் TEER 4 மற்றும் 5 வேலைகளில் கனேடிய வேலை அனுபவம் பெற்ற வெளிநாட்டு நபர்களுக்கு எளிதாக நிரந்தர குடியுரிமையை பெறுவதற்கான வாய்ப்புகளை உருவாக்கும்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |





Ehirneechal: மருத்துவமனையில் உயிருக்கு போராடும் ஈஸ்வரி- மருத்துவர்கள் சொன்ன அதிர்ச்சி தகவல் Manithan

சரிகமப சீசன் 5 போட்டியாளர் பாடிக்கொண்டிருக்கும் போதே அவரது வீட்டில் ஏற்பட்ட உயிரிழப்பு... சோகமான அரங்கம் Cineulagam

என் வாழ்க்கையை அழித்தவர் புடின்..! நேரடியாக தாக்கிய ரகசிய மகள்: ரஷ்யாவுக்கு எதிராக மாறியது ஏன்? News Lankasri

மீனாவிடம் மன்னிப்பு கேட்ட ரோஹினி, அருண் பற்றிய உண்மையை கூறிய முத்து.. சிறகடிக்க ஆசை சீரியல் Cineulagam
