கனடாவில் பணிபுரியும் வீட்டு பராமரிப்பாளர்களுக்கு நிரந்தர வதிவிட வசதி
கனடாவில் (Canada) பணிபுரிய விரும்பும் வீட்டு பராமரிப்பாளர்களுக்கு நிரந்தர வதிவிட (PR) வசதியை நேரடியாக வழங்கும் திட்டம் ஒன்றினை அறிமுகப்படுத்தவுள்ளதாக கனேடிய குடிவரவு அமைச்சர் மார்க் மில்லர் (Marc Miller) அறிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
"குறித்த திட்டத்தின் மூலம், கனடாவுக்கு வருகை தரும் புதிய வீட்டு பராமரிப்பு நிபுணர்களுக்கு வந்தடைந்த உடனேயே நிரந்தர வதிவிட வசதி வழங்கப்படும்.
அதேவேளை, அவர்களால் தற்காலிக அல்லது பகுதி நேர பராமரிப்பு வழங்கும் நிறுவனங்களில் பணியாற்ற முடியும்.
புதிய திட்டம்
மேலும், இந்தப் புதிய முறையானது, பராமரிப்பாளர்களுக்கு தகுதி பெற்ற நிறுவனங்களில் தகுந்த வேலையை எளிதாகப் பெற்றுக்கொள்ள உதவுவதுடன் கனடாவில் நிரந்தர வதிவிட நிலையைப் பெறுவதற்கு ஒரு சிக்கலற்ற வாய்ப்பை பெறவும் உதவும்.

இந்நிலையில், இந்த திட்டத்திற்கமைய கனடாவில் வீட்டு பராமரிப்பாளர்களாக பணிபுரிய விரும்புவர்கள் சில தகுதிகளை பெற்றவர்களாக இருத்தல் அவசியமாகும்.
ஆங்கிலம் அல்லது பிரெஞ்சு மொழியில் 4ஆவது கட்டம் வரையான தேர்ச்சி, கனடாவின் உயர்தர பாடசாலை டிப்ளோமாவிற்கு சமமான கல்வித்தகைமை, புதுப்பிக்கப்பட்ட வேலைத்தளங்களிலான அனுபவங்கள் மற்றும் முழு நேர வீட்டு பராமரிப்பாளர்களாக பணிபுரியும் வாய்ப்பை கொண்டிருத்தல் போன்ற தகுதிகள் எதிர்பார்க்கப்படுகின்றன.

அதேவேளை, பணியாளர்கள் தங்களது வருகையை இந்த ஆண்டு செப்டெம்பர் மற்றும் ஒக்டோபர் (Fall Season) மாதங்களுக்கு முன் அல்லது 2025ஆம் ஆண்டின் தொடக்கத்திற்கு முன் உறுதி செய்ய வேண்டும்.
அது மாத்திரமன்றி, கனேடிய சட்டத்திட்டங்களுக்கமைய வருகை தரும் பணியாளர்களுக்கு முழு தேவைகள் மற்றும் விண்ணப்ப வழிமுறைகள் உட்பட அனைத்து வசதிகளும் கிடைக்கும்” என சுட்டிக்காட்டியுள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
ஜனனியிடம் வீடியோ இல்லாத விஷயத்தை தெரிந்துகொண்ட கரிகாலன், பரபரப்பான எபிசோட்... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
மனைவிக்கு மயக்க மருந்து கொடுத்துக் கொன்ற மருத்துவர்: ரகசியக் காதலிக்கு அனுப்பிய செய்தி சிக்கியது News Lankasri
இன்னும் திருந்தாத மயிலின் அப்பா, இப்போது செய்த காரியம், வெடிக்கப்போகும் பிரச்சனை... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 Cineulagam