கொழும்பில் விநியோகிக்கப்படும் குடிநீரில் ஆபத்து - மக்களுக்கு எச்சரிக்கை
கொழும்பிலும் அதனைச் சூழவுள்ள பல பகுதிகளில் உள்ள மக்களுக்கு கலங்கலான நீர் கிடைப்பதாக மக்கள் தெரிவித்துள்ளனர்.
வெள்ளம் காரணமாக கலட்டுவா நீர் சுத்திகரிப்பு நிலையத்திலிருந்து செல்லும் பிரதான நீர் விநியோக பாதையின் ஒரு பகுதி வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுள்ளமையினால் இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது.
இந்த நிலமை காரணமாக குறைந்த அழுத்தத்தில் நீர் விநியோகம் செய்யப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையின் உயர் அதிகாரி ஒருவர் நேற்று பிற்பகல் தெரிவித்துள்ளார்.
நீர் விநியோகம்
இவ்வாறான நிலையில் பல பிரதேசங்களுக்கு காலை 6.00 மணி முதல் 9.00 மணி வரையிலும் மாலை 5.00 மணி முதல் இரவு 9.00 மணி வரையிலும் குறைந்த அழுத்தத்துடன் நீர் விநியோகம் செய்யப்படும்.
கலகெதர, பாதுக்க, கொடகம, ஹோமாகம, பன்னிபிட்டிய, ருக்மல்கம, பலன்வத்த, மத்தேகொட, மஹரகம, பொரலஸ்கமுவ மற்றும் பெப்பிலியான ஆகிய பிரதேசங்களுக்கு குறைந்த அழுத்தத்துடன் நீர் கிடைக்கும் என அதிகாரி குறிப்பிட்டுள்ளார்.
வெளியேறிய பிரதான நீர் குழாயின் பணிகள் விரைவில் பொருத்துவதற்கான நடவடிக்கைகள் நடைபெற்று வருவதாகவும் அந்த அதிகாரி மேலும் குறிப்பிட்டுள்ளார்.





10 திருமணம், 350 துணைவியர்..! மனைவிகளுக்கு பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை: யார் இந்த இந்திய மன்னர்? News Lankasri

திருமண மண்டபத்தில் ஆனந்தி கர்ப்பமாக இருக்கும் விஷயம் வெளிவந்தது.. ஷாக்கில் குடும்பம், சிங்கப்பெண்ணே புரொமோ Cineulagam

தந்திரமாக வேலை செய்து காய் நகர்த்திய குணசேகரன், சந்தோஷத்தில் அறிவுக்கரசி... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
